தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாலாஜாபாதில் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை

வாலாஜாபாதில் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை

வாலாஜாபாதில் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை


UPDATED : ஜூன் 16, 2026 05:36 PM

ADDED : ஜூன் 16, 2026 05:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 05:36 PM ADDED : ஜூன் 16, 2026 05:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாலாஜாபாத்:
வாலாஜாபாத் அரசு உதவி பெறும் பள்ளியில், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர், பேரூராட்சி சார்பில் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி நேற்று கவுரவிக்கப்பட்டனர்.

வாலாஜாபாத் பேரூராட்சி, நேரு நகர் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவியரில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, நேற்று பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

அதன்படி, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற யோகேஸ்வரன், இரண்டாம் இடம் பெற்ற பவுல்ராஜ், மூன்றாம் இடம் பெற்ற மாணவியர் நிவேதா மற்றும் மோகனா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி பங்கேற்று மாணவ - மாணவியரை கவுரவித்து ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினார்.

மாணவ மாணவியர் தங்களது கற்றல் திறனை மேம்படுத்தி கல்வி மூலம் பள்ளிக்கும், தன் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us