தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : ஆக 25, 2026 09:38 PM

ADDED : ஆக 25, 2026 09:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2026 09:38 PM ADDED : ஆக 25, 2026 09:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
நேஷனல் இன்ஸ்டிடியூட் மதுரை பயிற்சி மைம் சார்பில் 80வது சுதந்திர தினத்தையொட்டி 100 மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான பயிற்சியை இலவசமாக அளிக்க உள்ளது. இந்த நுாறு மாணவர்களில் 50 பேருக்கு வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சியை அளிக்க உள்ளனர்.

இந்த மாணவர்கள் தற்போது கல்லுாரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு கல்லுாரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள், படித்து முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இம்மாணவர்களை தேர்வு செய்ய, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பயிற்சி மையத்தில் நுழைவுத் தேர்வு நடைபெறும்.

தேர்வு செய்யப்படுவோருக்கு சனி, ஞாயிறுகளில் 4 முதல் 6 மாதங்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். முன்பதிவுக்கு 95666 59104 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பெயர், அலைபேசி எண், கல்லுாரி பெயர், படிக்கும் ஆண்டு, விண்ணப்பிக்கும் தேர்வின் பெயரை தேர்வு செய்து, அதை டைப் செய்து அனுப்ப வேண்டுபும் என மைய நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us