UPDATED : செப் 07, 2026 10:21 AM
ADDED : செப் 07, 2026 10:23 AM

அ நிறம் | அளவு
சென்னை:
தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் தேர்வுகள் தொடர்பாக, குறைகளை தெரிவிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
என்.டி.ஏ., அறிக்கை:
மாணவர்களின் கோரிக்கை சரியான துறைக்கு சென்று, விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய, எளிய நடைமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.
முதலாவதாக, தேர்வு விண்ணப்ப பதிவின் போது, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த வேண்டும். மின்னஞ்சலின் தலைப்பில், விண்ணப்ப எண் குறிப்பிட வேண்டும். சம்பந்தப்பட்ட தேர்வின் பெயரை குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
