UPDATED : அக் 16, 2026 05:02 PM
ADDED : அக் 16, 2026 05:03 PM
காரமடை:
காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், சிகர சாதனையாளர் விருது விழா நடந்தது.
தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “பெற்றோரையும், ஆசிரியர்களையும் வணங்க வேண்டும். முயற்சி திருவினையாக்கும். தெய்வத்தால் ஆகாது எனினும் மெய்வருத்தக் கூலி தரும்,” என்று, மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
10ம், பிளஸ் 2 வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்கள், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பள்ளி முதல்வர் சசிகலா, தாளாளர் பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, அறங்காவலர்கள் தாரகேஸ்வரி, ராஜேந்திரன், வேலுச்சாமி, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
