தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை தொகுப்பூதிய பணியாளர் வலியுறுத்தல்

பல்கலை தொகுப்பூதிய பணியாளர் வலியுறுத்தல்

பல்கலை தொகுப்பூதிய பணியாளர் வலியுறுத்தல்


UPDATED : அக் 19, 2026 02:49 PM

ADDED : அக் 19, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 02:49 PM ADDED : அக் 19, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
“மதுரை காமராஜ் பல்கலையில் பல ஆண்டுகளாக பணியாற்றியோருக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும்” என தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இப்பல்கலையில் எழுத்தர், ஓட்டுநர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 187 பேர் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். மொத்த பணியிடங்களில் 429 தொடர்ந்து காலியாக உள்ளன.

தற்போதுள்ள 187 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதம் ரூ.40 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இவர்களை பணிவரன்முறை செய்தால் குறைந்த அளவே கூடுதல் நிதி தேவைப்படும்.

தொகுப்பூதிய பணியாளர்கள் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யவும், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பணிவரன்முறை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க தலைவர் கோபிநாத், செயலாளர் சவரிகுரு மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் விஸ்வநாதனிடம் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us