UPDATED : அக் 24, 2026 02:25 PM
ADDED : அக் 24, 2026 02:25 PM
அ நிறம் | அளவு
கோவை:
டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில் 26வது பட்டமளிப்பு விழா நடந்தது. டாக்டர் என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐதராபத் ஒஸ்மானியா பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் மொலுகரம் பட்டங்களை வழங்கினார். முனைவர் பட்ட மாணவர்கள் 10, இளங்கலையில் 2044, முதுகலையில் 280 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
டாக்டர் என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், துணை செயல் அலுவலர் நடேசன், டாக்டர் என்.ஜி.பி., கல்விக் குழுமங்களின் இயக்குநர் முத்துசாமி, முதல்வர் சரவணன் சிறப்புரையாற்றினர்.
