தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு


UPDATED : அக் 28, 2026 05:35 PM

ADDED : அக் 28, 2026 05:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 05:35 PM ADDED : அக் 28, 2026 05:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 'பாதுகாப்பான குழந்தை பருவம்' என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார்.

அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள், கடமைகள் குறித்து விளக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்சோ சட்டம், குழந்தைகள் உதவி எண் 1098, சட்ட உதவி எண் 15100, கல்வித்துறை உதவி எண் 14417 குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

சமூக ஊடகங்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துதல், வாசிப்பு பழக்கம், செய்தித்தாள் வாசிப்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளை மாணவர்கள் பார்வையிட்டனர்.

ஏற்பாடுகளை முதுநிலை உதவியாளர் வசந்தி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சந்தோஷ் பேசினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us