தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆய்வேடுக்கான மதிப்பூதியம் வழங்காத பல்கலைகள்

ஆய்வேடுக்கான மதிப்பூதியம் வழங்காத பல்கலைகள்

ஆய்வேடுக்கான மதிப்பூதியம் வழங்காத பல்கலைகள்


UPDATED : நவ 05, 2026 08:30 PM

ADDED : நவ 05, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 08:30 PM ADDED : நவ 05, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழகத்தில் பி.எச்.டி., மாணவர்களின் ஆய்வேடுகளை (தீசிஸ்) மதிப்பீடு செய்யும் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை பெரும்பாலான பல்கலைகள் பல ஆண்டுகளாக வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

உயர்கல்வியில் ஆராய்ச்சி படிப்பு (பி.எச்.டி.,) முக்கியத்துவம் வாய்ந்தது. பிஎச்.டி., ஆய்வு, அவற்றின் எண்ணிக்கை அடிப்படையில் பல்கலைகளின் தரம் நிர்ணயிக்கப்படும்.

மாநில அளவில் 13 அரசு உட்பட 22 பல்கலைகளில் ஆண்டுதோறும் 3000 - 3500 ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றை மதிப்பீடு செய்ய சம்பந்தப்பட்ட பல்கலை பிற, வெளி மாநில பல்கலைகளின் பேராசிரியர்களுக்கு அனுப்புகின்றன.

இதற்காக ஒரு ஆய்வேடுக்கு ரூ. 1500 - ரூ.3000 வரை மதிப்பூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பல்கலைகள் இதை வழங்குவதில்லை.

பல்கலை ஆய்வு வழிகாட்டிகள் கூறியதாவது: ஆய்வேடு மதிப்பீடுக்கான கட்டணத்தை முன்கூட்டியே மாணவர்கள் செலுத்துகின்றனர். சில பல்கலைகள் 10 ஆண்டுகளாக இத்தொகையை வழங்காமல் உள்ளன.

சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் மீண்டும் ஆய்வேடுகள் மதிப்பீடுக்கு அனுப்பும்போது தேவையில்லாத தாமதம் ஏற்படுகிறது. தொகை சிறிதாக இருப்பினும் பேராசிரியர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க பல்கலைகள் முன்வர வேண்டும் என்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us