UPDATED : நவ 11, 2026 01:33 PM
ADDED : நவ 11, 2026 01:33 PM
கோவை:
ரயில்வே நிலைய அதிகாரி பணிக்கான போட்டி தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.
ரயில்வே தேர்வு வாரியத்தில், 2026ம் ஆண்டுக்கான 1,265 நிலைய அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 133 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. அடிப்படை சம்பளம் ரூ.35,400.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அக்., 27ல் துவங்கியது. நவ., 25 கடைசி நாளாகும். தகுதியுள்ளவர்கள் rrbapply.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு தயாராகும் கோவையை சேர்ந்தவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பங்கேற்க, https://forms.gle/RjU7wgmTYYis2Kxc9 என்ற கூகுள் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9499055937 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
