UPDATED : நவ 13, 2026 01:31 PM
ADDED : நவ 13, 2026 01:32 PM
அ நிறம் | அளவு
உடுமலை:
மடத்துக்குளம் காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக அமைதி தின நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆசிரியர் சையது முகமது குலாம் வரவேற்றார். ஆங்கில ஆசிரியர் கார்த்திகேயன் பேசுகையில், 'நவ., 11, 1918ல், முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இதை நினைவு கூறும் வகையில் இந்நாள் அமைதி மற்றும் போர் நிறுத்த நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
உலக அமைதியை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் நவ., 11ல் காலை 11:11 மணி முதல் 11:12 மணி வரை ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டு ஒற்றுமை வெளிப்படுத்தப்படும் நாள் இன்றைய நாளாகும்,' என்றார்.
உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன், 'அன்பு அமைதி சமாதானம்' என்ற தலைப்பில் பேசினார். அறிவியல் ஆசிரியர் நாகவேணி நன்றி தெரிவித்தார்.
