தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ பட்டயப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்

மருத்துவ பட்டயப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்

மருத்துவ பட்டயப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்


UPDATED : டிச 03, 2010 12:00 AM

ADDED : டிச 03, 2010 04:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2010 12:00 AM ADDED : டிச 03, 2010 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் பயிற்சி படிப்புகள் சேர்க்கைக்கான கவுன்சிலிங், 6ம் தேதி சென்னையில் நடக்கிறது.


மருத்துவ கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு: அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகளில், 23 மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளில் 5,842 இடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 6ம் தேதி கிண்டியில் உள்ள அரசு கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், காலை 9 மணி முதல் நடைபெறும்.


மருத்துவம் சார்ந்த 16 சான்றிதழ் பயிற்சிகள் (ஒரு ஆண்டு), ஒரு மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பயிற்சி (6 மாதங்கள்), இரண்டு மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பயிற்சிகள் (2 ஆண்டுகள்), மூன்று பட்டயப் படிப்பு பயிற்சிகள் (2 ஆண்டுகள்), ஒரு பட்டயப் படிப்பு பயிற்சி (ஒரு ஆண்டு) ஆகியவற்றுக்கான இடங்கள், கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.


மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் 5ம் தேதியும், பட்டயப் பயிற்சிகளுக்கான கவுன்சிலிங் 6 முதல் 14ம் தேதி வரையும் நடைபெறும். சான்றிதழ் பயிற்சி சேர்க்கைக்கான கவுன்சிலிங், 16 முதல் 20ம் தேதி வரையும், செவிலிய உதவியாளர் பயிற்சிக்கான கவுன்சிலிங் 21 முதல் 27ம் தேதி வரையும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us