தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., மாணவர்கள் பேஸ்புக் ஆர்வம்

ஐ.ஐ.டி., மாணவர்கள் பேஸ்புக் ஆர்வம்

ஐ.ஐ.டி., மாணவர்கள் பேஸ்புக் ஆர்வம்


UPDATED : டிச 13, 2010 12:00 AM

ADDED : டிச 13, 2010 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2010 12:00 AM ADDED : டிச 13, 2010 05:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை ஐ.ஐ.டி., யில்(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் துவங்கி வேலை நியமன காலம் தொடங்கிவிடும். இதன்படி நடப்பாண்டு டிசம்பர் முதல் தேதியில் துவங்கிய வேலைநியமன காலத்தில், சென்னை ஐ.ஐ.டி., மாணவர்களை வளாக தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்க ஏறக்குறைய 300 நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.



இந்த ஆண்டு உலக அளவில் பிரசித்திப்பெற்ற அமெரிக்காவின் சமூக வளைதளமான பேஸ்புக்கும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பேஸ்புக் அதிகபட்சமாக ஆண்டுக்கு 38 லட்ச ரூபாய் வரையிலான ஊதியத்தில் மாணவர்களை வேலைக்கு எடுக்க முன்வந்துள்ளதாக சென்னை ஐ.ஐ.டி.,யின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.



கடந்த ஆண்டு பங்கேற்ற 225 நிறுவனங்களில் "டவர் ரிசர்ச் கேப்பிடல்' நிறுவனம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 28 லட்ச ரூபாய் ஊதியத்தில் சென்னை ஐ.ஐ.டி., மாணவர்களை வேலை நியமனம் செய்தது. இந்த ஆண்டு எண்ணெய் நிறுவனமொன்று, இதேபோன்று அதிக ஊதியத்தில் மாணவர்களை வேலை நியமனம் செய்ய உள்ளதாக ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஐ.ஐ.டி., யில் படிப்பதற்கும் மற்ற கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us