தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிட்ஸ் நுழைவுத் தேர்வு அறிவிப்பு

பிட்ஸ் நுழைவுத் தேர்வு அறிவிப்பு

பிட்ஸ் நுழைவுத் தேர்வு அறிவிப்பு


UPDATED : டிச 22, 2010 12:00 AM

ADDED : டிச 22, 2010 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2010 12:00 AM ADDED : டிச 22, 2010 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், அடுத்த கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இக்கல்வி நிறுவனத்தில் பி.இ.(ஹானர்ஸ்), பி.பார்மா(ஹானர்ஸ்), எம்.எஸ்சி.(ஹானர்ஸ்), எம்.எஸ்சி.(டெக்) ஆகிய பிரிவுகளில் பல பாடத்திட்டங்கள் உள்ளன.


இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட மத்திய கல்வி வாரியம் அல்லது மாநில கல்வி வாரியம் அல்லது அதற்கு சமமான கல்வி நிறுவனங்களில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை படித்திருக்க வேண்டும். அந்த பாடங்களில் மொத்தமாக சேர்த்து 80% மதிப்பெண்ணோ அல்லது தனித்தனியாக ஒவ்வொன்றிலும் 60% மதிப்பெண்ணோ எடுத்திருக்க வேண்டும். அதேசமயம் நல்ல ஆங்கில அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆனாலும் &'பிட்ஸ்&' நடத்தும் நுழைவுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதி சேர்க்கைக்கு மிகவும் முக்கியம்.


வரும் 2011 -இல் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருப்பவர்கள் அல்லது கடந்த 2010 -இல் 12 ஆம் வகுப்பு தேர்வை முடித்தவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் இருமுறை முயற்சித்திருந்தால், சமீபத்திய முயற்சியில் பெற்ற பெற்ற மதிப்பெண்தான் கணக்கில் எடுக்கப்படும்.


ஆர்வமுள்ள மாணவர்கள் www.bitsadmission.com என்ற வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்று, அதை முறைப்படி நிரப்பி, குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத் தொகையுடன்(ஆண் - ரூ.1500/பெண் - ரூ.1000) ராஜஸ்தான், பிலானி முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்ப விற்பனை மற்றும் சமர்பித்தலுக்கான கடைசி தேதி 2011, ஜனவரி 21. இதைப் பற்றி மேலும் விரிவான விவரங்களை அறிய www.bitsadmission.com என்ற வலைதளத்திற்கே செல்லவும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us