தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்புவோர் கவனத்திற்கு!

ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்புவோர் கவனத்திற்கு!

ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்புவோர் கவனத்திற்கு!


UPDATED : டிச 23, 2010 12:00 AM

ADDED : டிச 23, 2010 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2010 12:00 AM ADDED : டிச 23, 2010 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அரசின் ஆதரவு நின்று போனதால், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை போக்க, வெளிநாட்டு மாணவர்களின் கல்வி கட்டணத்தை நம்பும் நிலைக்கு தள்ளப்பட்டன. சமீபகாலம் வரை, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை பல்கி பெருகியிருப்பதை நாம் இதனுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.


ஆஸ்திரேலிய பல்கலைகள், வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் விஷயத்தில், குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் தங்களின் கவனத்தை செலுத்தின. கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் மாணவர்களை கவரும் விதத்திலான உத்திகள் ஆகியவற்றுக்கு அக்கல்வி நிறுவனங்கள் நிறைய செலவழித்தன. ஒவ்வொரு ஆஸ்திரேலிய பல்கலையும் தங்களின் விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு சுமார் 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்தன. அதாவது தங்களின் லாபத்தொகையில் 15.11% -ஐ சந்தைப்படுத்தல் பணிக்காக மட்டுமே செலவழித்தன.


இந்த நிறுவனங்கள் ஒரு உயர்கல்வி மையங்கள், மாறாக பாஸ்ட்புட் கடைகள் அல்ல என்பதை இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில், விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தும் பணிக்காக இவ்வளவு செலவழிக்கும் அந்த பல்கலைக்கழகங்கள் புதியவை, சிறியவை மற்றும் குறைந்த லாபம் ஈட்டுபவை என்பதும் நம் கவனத்திற்குரியது.


இத்தகைய புதிய, அந்தளவு மதிப்போ, புகழோ இல்லாத இந்த சிறிய கல்வி நிறுவனங்கள், தங்களின் கவர்ச்சிகர விளம்பரங்களின் மூலம் பல வெளிநாட்டு மாணவர்களுக்கு அறிமுகமாகியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவிலுள்ள ஆஸ்திரேலியன் நேஷனல் பல்கலைக்கழகம்(1947 -இல் நிறுவப்பட்டது), அடிலைட் பல்கலைக்கழகம்(1874 -இல் நிறுவப்பட்டது), சிட்னி பல்கலைக்கழகம்(1850 -இல் நிறுவப்பட்டது) போன்ற பழமையான, புகழ்பெற்ற, தரமான கல்வியை வழங்கும் பல்கலைகள் பலருக்கும் தெரியாமலேயே இருக்கின்றன. இவை, தங்களின் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு மிகவும் குறைவாக செலவழிப்பவை. தரமான கல்விக்கு பெயர்பெற்றவை.


விளம்பரங்களுக்கு அதிகம் செலவழிப்பதானது, ஒரு பல்கலைக்கழகத்தின் மற்ற முக்கியமான மற்றும் ஜீவாதாரமான அம்சங்களான உள்கட்டமைப்பு வசதிகள், போதுமான ஆசிரியர்கள், அதிகளவிலான படிப்புகள் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு பல்கலை, தன்னைப் பற்றி சொல்வதிலிருந்தே, அதைப்பற்றி நாம் அறிந்துகொள்கிறோமே தவிர, உண்மைநிலை நமக்கு தெரிவதில்லை. எனவே ஒரு பல்கலையை தேர்வு செய்வதற்கு முன்பாக, விளம்பரத்தை வைத்து ஏமாறாமல், நன்கு ஆராய்ந்து உண்மை நிலையை தெரிந்துகொள்ள வேண்டும்.


பல்கலைக்கழக படிப்பானது உயர்வான ஒன்றாக இருப்பதால், நாம் ஒரு பல்கலையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக, அதன் உண்மை நிலையைப் பற்றி நன்கு ஆய்பவராக இருக்க வேண்டும். பல்கலை விளம்பரம் சொல்வதையெல்லாம் நம்பிவிடக்கூடாது. இந்த மனப்பான்மை, வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது.


(இந்த கட்டுரையை எழுதியவர் www.Uniaustralia.com.au என்ற வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. அந்த வலைத்தளமானது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களைப் பற்றிய மதிப்பாய்வுகள், தர மதிப்பீடுகள் மற்றும் தரநிலைகளை வழங்கும் பணியை செய்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)


 


நன்றி : கேரியர்360

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us