தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கீகாரம் இழந்த பீகார் கல்லூரிகள்

அங்கீகாரம் இழந்த பீகார் கல்லூரிகள்

அங்கீகாரம் இழந்த பீகார் கல்லூரிகள்


UPDATED : டிச 24, 2010 12:00 AM

ADDED : டிச 24, 2010 12:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2010 12:00 AM ADDED : டிச 24, 2010 12:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு


பீகார் மாநிலத்திலுள்ள 15 கல்லூரிகள் தங்களின் அங்கீகாரத்தை இழந்துவிட்டதாக நாக் அறிவித்துள்ளது.


குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் புதுப்பிக்க தவறியதால், பீகாரின் 15 கல்லூரிகள் தங்களின் அங்கீகாரத்தை இழந்துள்ளன. பாட்னாவிலுள்ள மகளிர் கல்லூரி மற்றும் புனித சேவியர் கல்லூரி ஆகிய 2 கல்லூரிகள் மட்டுமே உரிய காலத்திற்குள் தங்களின் அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளன. இந்த 2 கல்லூரிகளும் &'ஏ&' கிரேடு பெற்றவை. தற்போது பீகாரில் 21 அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மட்டுமே உள்ளன.


பீகாரிலுள்ள கல்லூரிகள் கடந்த 2005 ஆம் ஆண்டு கடைசியாக நாக் அமைப்பிடமிருந்து அங்கீகாரம் பெற்றன. எனவே தங்களின் பழைய அங்கீகாரத்தை வைத்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது என்று நாக் அமைப்பு, கல்லூரிகளை எச்சரித்துள்ளது.


அங்கீகாரம் பறிக்கப்பட்ட 15 கல்லூரிகளில் 12 கல்லூரிகள், லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் கீழ் வருபவை. தற்போது அந்த பல்கலையின்கீழ் 14 கல்லூரிகள் இயங்குகின்றன. இந்த எண்ணிக்கைதான் அந்த மாநிலத்தில் அதிகபட்சம். நாக் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 290 பீகார் கல்லூரிகளில் தற்போது சில கல்லூரிகள் மட்டுமே செல்லுபடியாகும் அங்கீகாரத்தை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us