தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரபல கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகள்

பிரபல கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகள்

பிரபல கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகள்


UPDATED : டிச 27, 2010 12:00 AM

ADDED : டிச 27, 2010 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2010 12:00 AM ADDED : டிச 27, 2010 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* கிராஜுவேட் பார்மசி திறனாய்வு தேர்வை எழுத விரும்புபவர்கள், 2011 ஜனவரி 17 முதல் பிப்ரவரி 21 -க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வானது மே 8 ஆம் தேதி நடைபெறும்.


இதைப்பற்றிய விரிவான விவரங்கள் அறிய www.gpat.in என்ற வலைதளத்தை அணுகவும்.


* ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலுள்ள இந்திய சுரங்கங்கள் கல்லூரி, தனது படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.


படிப்புகள் - வேதியியல், கணிதம், கம்ப்யூட்டிங் மற்றும் துணைநிலை இயற்பியல் போன்றவற்றில் எம்.எஸ்சி. பட்டம், துணைநிலை ஜியாலஜி மற்றும் ஜியோபிசிக்ஸ் பாடங்களில் எம்.எஸ்சி. பட்டம்.


இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் வேறு தகவல்களை www.ismdhanbad.ac.in என்ற வலைதளத்திலிருந்து ஜனவரி 3 முதல் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி மார்ச் 9.


* டெல்லியிலுள்ள இந்திய மறுவாழ்வு கவுன்சில் வரும் ஏப்ரல் 10௦ முதல் 30௦ வரையில் ஆன்லைன் திறனாய்வு தேர்வை நடத்துகிறது.


பாடத்திட்டம் - சிறப்பு கல்வியில் டிப்ளமோ பட்டம்.


இதற்கான ப்ராஸ்பெக்டஸ் மற்றும் விண்ணப்ப விற்பனை டிசம்பர் 27 முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்கும் கடைசி தேதி மார்ச் 15. விவரங்கள் அறிய www.rehabcouncil.nic.in என்ற வலைத்தளம் செல்லவும்.


* இந்தியாவின் ஐ.ஐ.டி. -களில் எம்.எஸ்சி. பட்டப் படிப்பு, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி-பிஎச்.டி. பட்டப் படிப்புகள் மற்றும் எம்.சி.ஏ. பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கூட்டு நுழைவுத்தேர்வை எழுதுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தலானது டிசம்பர் 22 -இல் தொடங்கியுள்ளது. ஜனவரி 24 இதற்கான கடைசி தேதி.


விரிவான விவரங்களுக்கு www.iitr.ac.in/jam என்ற வலைதளத்தை அணுகவும்.


* கோயம்புத்தூர், கொல்லம் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலுள்ள அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு 2011, ஏப்ரல் 17 ஆம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பிக்கும் கடைசி தேதி மார்ச் 25. விரிவான விவரங்களுக்கு www.amrita.edu. என்ற வலைதளத்தை அணுகவும்.


* இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை சம்பந்தமான பி.எஸ்சி. படிப்புகளுக்கான சேர்க்கைக்கான கூட்டு நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் கடைசி தேதி பிப்ரவரி 28.


தேர்வு நடைபெறும் தேதி ஏப்ரல் 16. பள்ளி மேல்நிலை படிப்பில் அறிவியல், வணிகவியல் மற்றும் மானுடவியல் பிரிவில் படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். விரிவான விவரங்களுக்கு www.nchmct.in என்ற வலைத்தளம் செல்லவும்.


* எம்.பி.பி.எஸ். படிப்பிற்காக அம்ரிதா மருத்துவக் கல்லூரி நடத்தும் நுழைவுத்தேர்வு மே 22 ஆம் தேதி நடக்கிறது. அதற்கான விண்ணப்ப விற்பனை மார்ச் 1 ஆம் தேதி தொடங்குகிறது.


விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஏப்ரல் 30. விரிவான விவரங்களுக்கு www.amrita.edu. என்ற வலைத்தளம் செல்லவும்.


* மும்பையிலுள்ள சி-டாக் நடத்தும் மென்பொருள் தொழில்நுட்பத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தேர்வு நடைபெறும் தேதி ஜனவரி 30. விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 17. விரிவான விவரங்களுக்கு www.cst.cdacmumbai.in என்ற வலைதளத்தை அணுகவும்.


* இந்தியாவிலுள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்களில் இயற்பியல் துறையில் பிஎச்.டி. ஆய்வை மேற்கொள்வதற்கான சேர்க்கைக்கு, பொது நுழைவுத்தேர்வானது பிப்ரவரி 20 ஆம் தேதி நடக்கிறது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜனவரி 3.


விரிவான விவரங்களுக்கு http://jest.2011.insc.res.in என்ற வலைதளத்தை அணுகவும்.


 


 


 


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us