தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தகவல் தொடர்புத் திறனை வளருங்கள்...

தகவல் தொடர்புத் திறனை வளருங்கள்...

தகவல் தொடர்புத் திறனை வளருங்கள்...


UPDATED : டிச 28, 2010 12:00 AM

ADDED : டிச 28, 2010 01:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2010 12:00 AM ADDED : டிச 28, 2010 01:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வளர்ந்து வரும் நாகரிகமான உலகில் உயரிய வேலைவாய்ப்புகளை பெற வேண்டுமானால் அதற்கு தகவல் தொடர்புத்திறன் மிக அவசியமான ஒன்றாகும். அதை வளர்க்க தேவையான முயற்சிகளில் நாம் இறங்க வேண்டும். தற்போது எண்ணற்ற பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சில சிறப்பான பயிற்சியைத் தருகின்றன. பயிற்சி நிறுவனங்களில் முறையான பயிற்சி அளிக்கப்படுகிறதா? தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா? முறையான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என அனைத்து காரணிகளையும் ஆராய்ந்து சேர வேண்டும்.


தகவல் தொடர்புத் திறன் என்பது பேசுவது, எழுதுவது உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டது. "பேச்சால் வாழ்ந்தவனும் உள்ளான்; பேச்சால் கெட்டவனும் உள்ளான்&' என்ற பழமொழிக்கு ஏற்றவாறு பேசுவதென்பது அவைகளில் முக்கியமான ஒன்றாகும். நாம் பேசுவதற்கு தேர்வு செய்யும் துறையில், பரந்த அறிவும், ஞானமும், அதிகமான நம்பிக்கையும், அளவுக்கு அதிகமான பயிற்சியும் இருந்தால் மட்டுமே சிறப்பாக பேச முடியும்.


பேசும் போது எதையும் யோசிக்காமல் பேச கூடாது. எதைப் பேச வேண்டும் என்பதை நன்றாக திட்டமிட்டுக் கொண்டு பேச துவங்க வேண்டும். பேசும் மொழி நடையானது எவ்வளவு முக்கியமோ அதைப் போலவே முக்கியமானது உபயோகப்படுத்தும் வார்த்தைகள். நேர்மறையான வார்த்தைகள் நமது நடையில் சரளமாக வர வேண்டும். சர்ச்சைக்குரியவை பற்றிப் பேசுவதை எப்போதுமே தவிர்த்து விட வேண்டும். எதைப் பேச வேண்டுமோ அதில் தெளிவான கருத்துக்களும் எளிமையான நடையும் துல்லியமான விஷயங்களும் இடம் பெற வேண்டும்.


நாம் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழுவது போல், நாமும் மற்றவர்கள் பேச்சை கவனிக்க வேண்டும். உங்கள் மொழிநடையில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிருங்கள். மற்றவர்களின் கண்களை பார்த்து பேசுங்கள். அது உங்களின் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும் செயலாகும். மேற்கூறிய வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் உங்களுடைய தகவல் தொடர்புத் திறன் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us