மருத்துவ படிப்பிற்கான ஏ.எப்.எம்.சி. நுழைவுத்தேர்வு
மருத்துவ படிப்பிற்கான ஏ.எப்.எம்.சி. நுழைவுத்தேர்வு
UPDATED : டிச 30, 2010 12:00 AM
ADDED : டிச 30, 2010 05:50 PM
இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச தங்குமிடம் உண்டு. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச ரேஷன், சலுகை விலை மெஸ் வசதி, விடுமுறை காலங்களில் வீடு சென்று திரும்புவதற்காக ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏ.சி. டிக்கெட், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை மற்றும் சீருடைக்கான உதவித்தொகை போன்ற பல சலுகைகள் வழங்கப்படும். மேலும் டியூஷன் கட்டணம் வசூலிக்கப்படாது.
விண்ணப்பிக்கும் அனைவரும் மருத்துவ சோதனை செய்ய வேண்டும். திருமணமாகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். படிப்பு காலத்தில் திருமணம் செய்வதற்கும் அனுமதி இல்லை. இது ஒரு ரெசிடென்ஷியல் கல்லூரி என்பதால், ஆண்-பெண் அனைவரும் வளாகத்திலேயே தங்கி படிக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் ரெகுலர் மாணவராக படித்து, இறுதி தேர்வில், முதல் முயற்சியிலேயே இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் மொத்தமாக சேர்த்து 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த 3 பாடங்கள் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பில் கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி. பட்டம் பெற்றவர்கள், தங்களின் 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மொத்தமாக சேர்த்து 60% மதிப்பெண் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
வரும் 2011, மார்ச் மாதம் தகுதித் தேர்வு எழுதவிருப்பவர்களும் இந்த நுழைவுத்தேர்வில் பங்கேற்கலாம். அதேசமயம் 2011, டிசம்பர் 31 -படி அவர்கள் 17 வயதை அடைந்தவராக இருக்க வேண்டும் மற்றும் 22 வயதை தொட்டவராக இருக்கக்கூடாது. பி.எஸ்சி. முடித்தவர்கள் அல்லது இறுதிவருட தேர்வு எழுதவிருப்பவர்கள் 2011, டிசம்பர் 31 -படி 24 வயதை தொட்டவராக இருக்கக்கூடாது.
இந்த படிப்பிற்கு விண்ணப்பம் செய்வது எப்படி என்பது பற்றிய தகவல் மற்றும் பிற விரிவான விஷயங்களை அறிந்துகொள்ள www.afmc.nic.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
