தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச தொழில்பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

இலவச தொழில்பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

இலவச தொழில்பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : டிச 31, 2010 12:00 AM

ADDED : டிச 31, 2010 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2010 12:00 AM ADDED : டிச 31, 2010 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அளிக்கப்படும் பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகளுக்கு, விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்.எம்., கல்வி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் எளிதாக வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, சரக்கு போக்குவரத்து, துறைமுக மேலாண்மை, டி.டி.பி., மல்டிமீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளன.


தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம், ஆர்.எம்., கல்வி அறக்கட்டளை இந்த இலவச பயிற்சியை நடத்துகிறது. பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, அரசின் சான்றிதழ் வழங்கப்படும். ஆறு மாதம் நடைபெறும் இப்பயிற்சியில் சேர, 35 வயதிற்கு உட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு கிடையாது.


தகுதியிருப்பவர்கள், உரிய சான்றிதழ்கள் மற்றும் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன், ஆர்.எம்., கல்வி அறக்கட்டளையின் பயிற்சிப் பிரிவான தமிழ்நாடு அட்வான்ஸ் டெக்னிக்கல் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டை (42/25, ஜி.ஜி., காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், அண்ணா சாலை, சென்னை-2) அணுகலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us