தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளம் விஞ்ஞானிகள் வேண்டும்: பிரதமர்

இளம் விஞ்ஞானிகள் வேண்டும்: பிரதமர்

இளம் விஞ்ஞானிகள் வேண்டும்: பிரதமர்


UPDATED : ஜன 03, 2011 12:00 AM

ADDED : ஜன 03, 2011 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 03, 2011 12:00 AM ADDED : ஜன 03, 2011 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் நடைபெறும் அறிவியல் மாநாட்டில் பேசிய பிரதமர், இளம் விஞ்ஞானிகளின் திறமையை வெளிக்கொணரவும், அதிகளவிலான மனிதவளத்தை ஆராய்ச்சி துறைகளை நோக்கி திருப்பவும் 2012-13 ஆம் ஆண்டை "இந்திய அறிவியல் ஆண்டாக" அறிவித்தார். இந்த ஆண்டு இந்திய அறிவியல் மாநாட்டின் நூற்றாண்டாகும்.


பிரதமர் மேலும் கூறியதாவது, "விஞ்ஞானத்திற்கு வயதில்லை. ஆனால் விஞ்ஞானிகள் இளைஞர்களாக இருக்க வேண்டும். இளம் விஞ்ஞானிகளை கட்டமைத்து ஊக்குவிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன. 10 முதல் 27 வயது வரையான 3.5 லட்சம் மாணவர்கள், அறிவியல் படிப்பை மேற்கொள்வதற்கு உதவித்தொகையை பெறுகிறார்கள். இந்திய விஞ்ஞானிகள் ஒரு எல்லையை தாண்டி பெரியளவில் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் சிறப்பான அறிவியல் முன்னேற்றம் உண்டாகும். இந்திய விஞ்ஞானிகள் பெரியளவில் ஏதாவது செய்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல ராமன்களையும், ராமானுஜன்களையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.


நான் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அந்நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த பல இளம் விஞ்ஞானிகளை சந்திப்பதுண்டு. அப்போது அவர்கள் தாங்கள் இந்தியாவிற்கு திரும்பும் நாளை ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாக கூறுவர். அவர்கள் இந்தியாவிற்கு திரும்பினால் அவர்களை பயன்படுத்திக் கொள்வதற்கான நமது திட்டம் என்ன? நமது பல்கலைக்கழகங்களை அச்சூழலுக்கேற்ப எப்படி தயார்செய்யப் போகிறோம்? இத்தகைய சவால்களுக்கு என் முன்னே அமர்ந்திருக்கும் உங்களைப் போன்ற விஞ்ஞானிகள் தீர்வு காண்பீர்கள் என்று நம்புகிறேன்.


நாட்டில் தரமான உயர்கல்வி அவசியம். அதற்கான முயற்சியில் மத்திய அரசு ஏற்கனவே இறங்கிவிட்டது. பல்கலைக்கழக அமைப்பை மேம்படுத்த சிறப்பு கவனம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 வருடங்களில் நாடு முழுவதும் 8 ஐ.ஐ.டி. -களும், 5 உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நமது பொருளாதார வளர்ச்சி மற்றும் நமது மக்களின் பாதுகாப்பு போன்றவை நம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை சார்ந்தே இருக்கிறது. அதேசமயம் விஞ்ஞானமானது நவீனமாகவும், சுதந்திரம் மிக்கதாகவும் இருக்க வேண்டும். அறிவியல் ஆற்றல் ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.


இந்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக சந்தையில் பெரியளவில் விளம்பரப்படுத்தப்படாதது கவலை அளிக்கிறது. ஒளி சிதறலுக்காக சி.வி. ராமன் நோபல் பரிசு பெற்றாலும், அந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்ட பல தொழில்நுட்ப பொருட்கள் இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.


அறிவியல் கண்டுபிடிப்புகளை நுகர்வோர் பயன்பாட்டு பொருட்களாக மாற்றி வெற்றிபெற, பல்கலைக்கழகம் - தொழிற்சாலை ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுவாக்க வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்பாட்டு பொருட்களாக மாற்றுவதில் நாம் இன்னும் பலவீனமானவர்களாகவே இருக்கிறோம். இந்த சிக்கலை தீர்ப்பதற்கான தீர்வு என்ன? இந்த அறிவியல் மாநாட்டில் அதற்கான வழி காணப்படும் என்று நம்புகிறேன்.


நமது பல்கலைக்கழகங்கள், அலுவல் மற்றும் நடைமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், படைப்புத்திறனுக்கும், மேதமைக்கும் முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று தனது ஆதங்கத்தையும், விருப்பங்களையும் வெளிப்படுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us