தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம்

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம்

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம்


UPDATED : ஜன 08, 2011 12:00 AM

ADDED : ஜன 08, 2011 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2011 12:00 AM ADDED : ஜன 08, 2011 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொறியியல் கல்லூரிகளைப் போல, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணியையும் ஏ.ஐ.சி.டி.இ.,யே மேற்கொள்ளும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, புதிதாக பாலிடெக்னிக் கல்லூரிகள் துவங்கவும், ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கவும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதியை பெற வேண்டும்.


நாடு முழுவதும் தொழில்நுட்பக் கல்வியை கண்காணித்து, அக்கல்லூரிகளை கட்டுப்படுத்தும் பணியை, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) செய்து வருகிறது. புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்கவும், ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதியை பெற வேண்டும்.


இதேபோல, மேலாண்மை, பார்மசி, ஆர்கிடெக்சர், ஓட்டல் மேலாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி மையங்களும் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதியை பெற்று கல்லூரிகளை நடத்தி வருகின்றன. ஆனால், பாலிடெக்னிக் கல்லூரிகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் அனுமதியை பெற்று கல்லூரிகளை நடத்தி வருகின்றன.


ஏ.ஐ.சி.டி.இ.,யின் 2011-12ம் ஆண்டிற்கான கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் விதிமுறைகளை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் சமீபத்தில் வெளியிட்டார். அதில், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணியையும் ஏ.ஐ.சி.டி.இ.,யே மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நடைமுறை, வரும் கல்வியாண்டு முதலே அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், பிளஸ் 2வில் தொழிற்கல்வி படித்த மாணவர்களும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் டிப்ளமா படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்த்து கொள்ளப்படுவர் என்றும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டல தலைவர் மன்னர் ஜவகர் கூறியதாவது: கடந்த 2001ம் ஆண்டு வரை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணியையும் ஏ.ஐ.சி.டி.இ., தான் மேற்கொண்டு வந்தது. பணிச்சுமை காரணமாக, 2001ம் ஆண்டு ஏ.ஐ.சி.டி.இ., அப்பணியை, மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திடம் ஒப்படைத்தது.


தற்போது, அங்கீகாரம் வழங்குவதற்கான நடைமுறைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இம்முறையில் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணி எளிமையாகியிருப்பதால், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணியையும் ஏ.ஐ.சி.டி.இ.,யே மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.


449 பாலிடெக்னிக் கல்லூரிகள்: தமிழகத்தில் தற்போது 491 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் 449 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us