UPDATED : ஜன 10, 2011 12:00 AM
ADDED : ஜன 10, 2011 10:56 AM
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் நடந்த 98 வது இந்திய அறிவியல் மாநாடு நிறைவுபெற்றது. 99 வது மாநாடு ஒரிசா தலைநகர் புவனேஷ்வரில் நடக்க உள்ளது.
இந்த சென்னை மாநாட்டில் 10,400 பிரதிநிதிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த 130 விஞ்ஞானிகள் மற்றும் நோபல் பரிசுபெற்ற 6 விஞ்ஞானிகள் போன்ற பெரியளவிலான பங்களிப்புகளால், இந்த மாநாடு பிரமாண்டமான ஒன்றாக விளங்கியது. மேலும் இந்த மாநாட்டின் கருப்பொருள் "இந்திய பல்கலைக்கழகங்களின் அறிவியல் ஆராய்ச்சியில் தரமான கல்வி மற்றும் மதிநுட்பம்" என்பதாக இருந்தது.
அதேசமயம் அடுத்த 2012, ஜனவரி 3 முதல் 7ம் தேதி வரை நடைபெறவுள்ள 99 வது இந்திய அறிவியல் மாநாட்டில் "பெண்களின் படைப்பாக்க ரீதியான பங்களிப்பிற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" என்பது கருப்பொருளாக இருக்கும். மேலும் இம்மாநாட்டில் பருவநிலை மாறுபாடு, உணவு பாதுகாப்பு, கிராமப்புற வாழ்க்கை பாதுகாப்பு, தூய்மையான ஆற்றல், குழந்தை மருத்துவம் மற்றும் கிராமப்புறங்களுக்கான அறிவியல் கல்வி உள்ளிட்ட பல தலைப்புகள் விவாத அம்சங்களாக இருக்கும்.
