தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.சி.ஐ.சி.ஐ. கிராம மேம்பாட்டிற்கான உதவித்தொகை

ஐ.சி.ஐ.சி.ஐ. கிராம மேம்பாட்டிற்கான உதவித்தொகை

ஐ.சி.ஐ.சி.ஐ. கிராம மேம்பாட்டிற்கான உதவித்தொகை


UPDATED : ஜன 13, 2011 12:00 AM

ADDED : ஜன 13, 2011 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2011 12:00 AM ADDED : ஜன 13, 2011 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு


உள்ளடங்கிய வளர்ச்சிக்கான ஐ.சி.ஐ.சி.ஐ. பவுண்டேஷன், ஐ.சி.ஐ.சி.ஐ. உதவித்தொகைகளுக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் 21 முதல் 28 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நபரும் என்.ஜி.ஓ -க்களுடன் இணைந்து இரண்டு வருடங்கள் கிராமப்புற இந்தியாவில் மேம்பாட்டு திட்டங்களில் பணியாற்ற வேண்டும். இப்பணியில் ஈடுபடும் ஒவ்வொரு நபருக்கும் ஆலோசகரின் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும்.


மேலும் அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, பயணப்படி, மருத்துவ காப்பீடு, தொழில் ஆலோசனை, தொழில்முறை இணைப்பு மற்றும் பல நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு போன்ற வசதிகள் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு மொத்தம் 50 இளைய பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்காக விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜனவரி 31. இதுசம்பந்தமான விரிவான விவரங்களை அறிய www.icicifoundation.org என்ற வலைதளத்தை அணுகவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us