தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேக்ட் நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பணியிடங்கள்

பேக்ட் நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பணியிடங்கள்

பேக்ட் நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பணியிடங்கள்


UPDATED : ஜன 24, 2011 12:00 AM

ADDED : ஜன 24, 2011 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2011 12:00 AM ADDED : ஜன 24, 2011 05:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவிலுள்ள உரத் தயாரிப்பு நிறுவனங்களில் பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் என்ற பேக்ட் நிறுவனம் மிகவும் பழமையானதும், பிரம்மாண்டமான நிறுவனமும் ஆகும்.


அறிவியல் தொழில் நுட்பத் துறையில் காலம் தோறும் ஏற்பட்ட மாறுதல்களுக்கேற்ப இந்த நிறுவனம் வெற்றிகரமாகத் தன்னை மாற்றிக் கொண்டதுடன் கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், ஹைட்ரோ மெட்டலர்ஜி, பார்மசூடிகல் போன்ற பல்வேறு துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் அப்ரன்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


என்னென்ன பிரிவுகள்
டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் பிட்டர் மெஷின்ஸ்ட், அட்டென்டண்ட் ஆப்பரேட்டர்கெமிகல் பிளான்ட், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கெமிக்கல் பிளான்ட் இடங்களும், கிராஜூவேட் அப் ரென்டிஸ், டெக்னீசியன் அப் ரென்டிஸ் பணி இடங்களும் பேக்ட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ளன.


வயது வரம்பு
பேக்ட் நிறுவனத்தின் பல்வேறு அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது 23 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி
டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் வரும் பிட்டர் மெஷினிஸ்ட் இடங்களுக்கு விண்ணப்பிக்க பிட்டர், மெஷின்ஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், பிளம்பர், கார்பென்டர் உள்ளிட்ட ஏதாவது ஒரு பிரிவில் ஐ.டி.ஐ., அல்லது ஐ.டி.சி., படிப்பினை முடித்திருக்க வேண்டும்.


இதே பிரிவில் வரும் கெமிக்கல் பிளான்ட் அட்டென்டண்ட் ஆப்பரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்சி.,யில் வேதியியல் படிப்பை இயற்பியல் மற்றும் கணிதம் துணைப்பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும். இதே பிரிவில் வரும் கெமிக்கல் பிளான்ட் இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் பதவிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி.,இயற்பியல் படிப்பை வேதியியல் மற்றும் கணிதம் துணைப்பாடங்களுடன் முடித்திருக்க வே ண்டும்.


கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க சிவில், கெமிக்கல், கம்ப்யூட்டர்,எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பட்டப்படிப்பை 15.04.2008க்குப் பின் முடித்திருக்க வேண்டும்.


டெக்னீசியன் அப்ரென்டிஸ்
பிரிவுக்கு விண்ணப்பிக்க சிவில், கெமிக்கல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை 15.04.2008க்குப் பின் முடித்திருக்க வேண்டும். முழு விபரங்கள் அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.


தேர்ச்சி முறை
பேக்ட் நிறுவனத்தின் அப்ரென்டிஸ் காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவுக்கு ஏற்றபடி வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை பல்வேறு தேதிகளில் இந்த எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.


விண்ணப்பிப்பது எப்படி
பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தின் அப்ரென்டிஸ் காலிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தை தவறாமல் பார்க்கவும். தேர்வு எழுத செல்லும் போது வயது சான்றிதழ், மதிப்பெண் மற்றும் பட்டயச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். எழுத்துத் தேர்வு பின்வரும் முகவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


முகவரி
FACT Training Centre,
Udyogamandal near Kalamassery,
Kochi, Kerala.
இணைய தள முகவரி:
www.factindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us