தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.சி.சி. மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது

என்.சி.சி. மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது

என்.சி.சி. மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது


UPDATED : ஜன 29, 2011 12:00 AM

ADDED : ஜன 29, 2011 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2011 12:00 AM ADDED : ஜன 29, 2011 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு


இந்திய அளவில் என்.சி.சி. மாணவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்த்தப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு என்.சி.சி. மாணவர்களின் பேரணி நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் மத்தியில் பேசிய மன்மோகன் சிங், "தற்போது 13 லட்சமாக இருக்கும் என்.சி.சி. மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் உயர்த்தப்பட்டு, 15 லட்சமாக அதிகரிக்கப்படும்" என்றார். மேலும் மாணவர்களை கட்டுப்பாடும், நாட்டுப்பற்றும் உடையவர்களாக மாற்றுவதில் என்.சி.சி. இயக்கம் ஆற்றிவரும் பங்கை பிரதமர் பாராட்டி பேசினார்.


என்.சி.சி. இயக்கத்தின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் 5 புதிய குரூப் தலைமையகங்களும், 40 புதிய யூனிட்டுகளும் சேர்க்கப்படும். மேலும் தற்போது என்.சி.சி. அமைப்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 24% என்ற அளவிலிருந்து 33% என்ற அளவிற்கு அதிகரிக்கப்படும். பின்னர் இறுதியாக இந்த எண்ணிக்கை 50% என்ற சமநிலைக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us