UPDATED : பிப் 02, 2011 12:00 AM
ADDED : பிப் 02, 2011 02:52 PM
கல்விச்சுற்றுலா செல்லும் வாகனங்களுக்கு, கூடுதல் வரி வசூலிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிறுவன வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், விண்ணப்ப கட்டணம் 300; சேவை வரி 150 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த அனுமதியை ஐந்து ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இது தவிர, காலாண்டில் ஒரு இருக்கைக்கு, பள்ளி வாகனத்திற்கு 50; கல்லூரி வாகனத்துக்கு, 100 ரூபாய் செலுத்த வேண்டும். கல்விச் சுற்றுலா செல்லும் போது, 150 ரூபாய் செலுத்தி, ஏழு நாட்களுக்கு (தமிழகத்திற்குள்) மட்டும் அனுமதி பெறலாம்.
தற்போது கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இதன்படி, பிற மாவட்டம், மாநிலம் செல்ல, தற்காலிக அனுமதிக்கு, 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம்; கூடுதல் வரியாக, ஒரு இருக்கைக்கு, 30 ரூபாய் செலுத்த வேண்டும். பிற மாநிலங்கள் செல்லும் போது, அங்குள்ள முறைப்படியும் வரி கட்ட வேண்டும்.
தற்காலிக அனுமதி பெற்று வேறு நபர்களை ஏற்றிச் சென்றால், ஒரு நாளுக்கு, ஒரு இருக்கைக்கு, 30 ரூபாய், கூடுதலாக வசூலிக்கப்படும்.
