தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புல்ப்ரைட் உதவித்தொகை விவரங்கள் அறிவிப்பு

புல்ப்ரைட் உதவித்தொகை விவரங்கள் அறிவிப்பு

புல்ப்ரைட் உதவித்தொகை விவரங்கள் அறிவிப்பு


UPDATED : பிப் 05, 2011 12:00 AM

ADDED : பிப் 05, 2011 03:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2011 12:00 AM ADDED : பிப் 05, 2011 03:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்க-இந்திய கல்வி பவுண்டேஷன்(யு.எஸ்.ஐ.இ.எப்), படிப்பு மற்றும் அதுசார்ந்த விஷயங்களுக்கு வழங்கப்படும் புல்ப்ரைட்-நேரு மற்றும் பிற புல்ப்ரைட் உதவித்தொகைகளுக்கான வருடாந்திர போட்டிகளை அறிவித்துள்ளது.


அமெரிக்காவில் படிப்பு, ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக இந்த புல்ப்ரைட் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து துறைகளையும் சார்ந்த திறமைவாய்ந்த இந்திய மாணவர்கள், தொழில்துறையினர், ஆசிரியர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆகிய அனைவரும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமெரிக்க தூதரக அறிக்கை தெரிவிக்கிறது.


இந்திய - அமெரிக்க இருதரப்பு புல்ப்ரைட் ஒப்பந்தம் மூலமாக, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் உதவித்தொகைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் 2012 ம் ஆண்டில், ஏறக்குறைய 120 இந்தியர்களுக்கு புல்ப்ரைட் - நேரு உதவித்தொகைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி விரிவான விவரங்கள் அறிய www.usief.org.in என்ற வலைத்தளம் செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us