தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு எழுதும் மாணவர்களுக்கான டிப்ஸ்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கான டிப்ஸ்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கான டிப்ஸ்


UPDATED : பிப் 21, 2011 12:00 AM

ADDED : பிப் 21, 2011 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2011 12:00 AM ADDED : பிப் 21, 2011 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* தேர்வு அறைக்கு அரை மணி நேரம் முன்னதாக சென்றுவிட வேண்டும். தேர்வுக்கு தேவையான ஹால்டிக்கெட், பேனா, பென்சில், ஸ்கேல் போன்ற அனைத்து பொருள் களையும் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


* தேர்வு அறையில் எந்தவித ஒழுங்கீன நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கக் கூடாது. தேவையற்ற பொருள்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக் கூடாது.


* முதலில் வினாத்தாளை முழுவதுமாக படித்துப் பார்க்க வேண்டும். தற்போது தேர்வுத்துறை இதற்கென கூடுதலாக 15 நிமிடங்களை ஒதுக்கி உள்ளது. இதை பயன்படுத்தி முதலில் எந்த பகுதி வினாக்களுக்கு பதில் அளிக்கலாம், எந்தெந்த வினாக்களை தேர்வு செய்யலாம் போன்றவற்றை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.


* திருத்துபவர்களுக்கு எளிதாக புரியும்படி விடைகளை தெளிவாக எழுத வேண்டும். முக்கியமான வார்த்தைகளை கோடிட்டு காட்ட வேண்டும்.


* பதில் அளிக்கும் வினாக்களின் எண்களை சரியாக குறிப்பிட வேண்டும். தவறான எண்ணையோ அல்லது எண்களை குறிப்பிட தவறினாலோ உங்களின் விடை, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


* கணித பாடத்தை பொறுத்தளவில் "பார்முலா'க்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.


* படம் வரைந்து விளக்க வேண்டிய வினாக்களுக்கு தவறாமல் படங்களை வரைய வேண்டும். உங்கள் விடைகளுக்கு ஏற்ப சின்ன படங்களை வரைந்து விளக்குவது திருத்துபவர்களின் கவனத்தை ஈர்க்கும்.


* தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். அதிலும் முடிந்தவரை வினாக்களின் எண் வரிசையில் பதிலளிப்பது திருத்துபவர்களுக்கு எளிதாக இருக்கும்.


* எழுதிய விடைகளை சரிபார்க்க குறைந்தபட்சம் 20 நிமிடங்களை ஒதுக்க வேண்டும்.


* ஒரு தேர்வை எழுதி முடித்தவுடன் அதுகுறித்த தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்க வேண்டும். அடுத்த தேர்வை எப்படி சிறப்பாக எழுதுவது என்று சிந்திப்பது புத்திசாலித்தனம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us