UPDATED : மார் 01, 2011 12:00 AM
ADDED : மார் 01, 2011 04:21 PM
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் 1865ல் ஒரு ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனியாக துவங்கப்பட்ட அலகாபாத் வங்கி பின்னர் தேசியமயமாக்கப்பட்டது. இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்ட இந்த வங்கி சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமான சேவைகளால் நாடெங்கும் அறியப்படு கிறது. அலகாபாத் வங்கியில் கிளரிகல்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
அலகாபாத் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
பிளஸ் டூவிற்கு நிகரான படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்களும் அலகாபாத் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இத்துடன் கம்ப்யூட்டரில் திறனும், விண்ணப்பிக்கும் மாநில மொழியில் திறனும் கூடுதலாகத் தேவைப்படும்.
தேர்ச்சி முறை
அலகாபாத் வங்கியின் கிளரிகல் பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னையிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையமான பெங்களூருவிலும் 08.05.2011 அன்று நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300/ஐ அருகிலுள்ள ஏதாவது ஒரு அலகாபாத் வங்கிக் கிளையில் 50048720341 என்ற அக்கவுண்ட் எண்ணில் "Clerical (SWO 'A') Recruitment Project" என்ற பெயரில் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ரூ. 50/ மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
அலகாபாத் வங்கியின் கிளரிகல் பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தத் தேர்ச்சி முறையின் பல்வேறு முக்கிய தகவல்கள் உங்கள் இமெயில் வாயிலாகவே அனுப்பப்படும் என்பதால் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள இமெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். விண்ணப்பிக்கும் முறை, இதர விபரங்கள் பற்றிய முழுமையான தகவல்களை அறிய அலகாபாத் வங்கியின் இணைய தளத்தை முழுமையாகப் பார்த்து அறியவும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.03.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 08.05.2011
இணைய தள முகவரி: www.allahabadbank.com
