தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிப்படையாக செயல்பட்ட தனியார் பள்ளி

வெளிப்படையாக செயல்பட்ட தனியார் பள்ளி

வெளிப்படையாக செயல்பட்ட தனியார் பள்ளி


UPDATED : மார் 13, 2011 12:00 AM

ADDED : மார் 13, 2011 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2011 12:00 AM ADDED : மார் 13, 2011 12:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. அட்மிஷனுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்ததால், ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


கல்வியே வாழ்க்கையின் ஆதாரம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளதால், சமீபகாலமாக சிறந்த பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஒவ்வொரு பெற்றோரும் படாதபாடு பட்டு வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில், கடலூர் ஏ.ஆர்.எல்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்ப்பதற்காக 414 பேர் விண்ணப்பித்திருந்தனர்.


இப்பள்ளியில் 132 இடங்கள் மட்டுமே உள்ளதால் பெற்றோர் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனரகம் கடந்த மாதம் அரசாணை ஒன்று வெளியிட்டது. அதில் ஒவ்வொரு மெட்ரிக் பள்ளியும், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 25% இடங்களை பள்ளியின் சுற்று வட்டாரத்தில் உள்ள நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளது.


அதன்படி கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி நிர்வாகம் எல்.கே.ஜி. வகுப்பில் உள்ள 132 இடங்களில் 33 சீட்டுகளை ஒதுக்கீடு செய்தது. மீதமுள்ள 99 இடங்களுக்கு பெற்றோர் மத்தியில் கடும் போட்டி நிலவியதால், நெருக்கடிகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளி நிர்வாகம் முன்மாதிரி நடவடிக்கையை மேற்கொண்டது.


அதில், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சகோதர, சகோதரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், மீதமுள்ள இடங்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யவும் முடிவு செய்தது. அதன்படி, இதே பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சகோதர, சகோதரிகள் 59 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை உத்தரவு வழங்கப்பட்டது.


மீதமுள்ள 40 இடங்களுக்கான குலுக்கல் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி நிர்வாகி ஏ.ஆர்.தாமோதரன் தலைமை தாங்கினார். முதல்வர் ராஜயோக குமார், கல்விக்குழு உறுப்பினர்களான ராஜாராமன், ராமநாதன், அருளப்பன் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி சுப்ரமணியன், பெற்றோர் முன்னிலையில் 40 மாணவர்களை தேர்வு செய்தார்.


பெற்றோர்களிடம் நிலவும் போட்டா, போட்டியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் இக்காலக் கட்டத்தில், ஏ.ஆர்.எல்.எம். பள்ளி நிர்வாகம் வெளிப்படையாக குலுக்கல் முறையில் "அட்மிஷன்" வழங்கியது பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதே முறையை பிற பள்ளிகளும் மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us