UPDATED : மார் 15, 2011 12:00 AM
ADDED : மார் 15, 2011 11:27 AM
பாலிமர் இன்ஜினியரிங் என்பது பாலிமர் பொருட்களின் வடிவமைப்பு, மூலக்கூறுகள், பயன்பாடு ஆகியவற்றை முழுவதுமாக ஆராய்ந்து படிக்கும் இன்ஜினியரிங் துறை. மெட்டீரியல் துறையில் வேகமாக வளர்ந்து வரும் பொருட்களில் ஒன்று பாலிமர் இன்ஜினியரிங் துறை. அதிகரிக்கும் பாலிமரின் உற்பத்திக்கேற்ப இத்துறையில் பணி புரிபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பாலிமர்களை உற்பத்தி செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றில் கெமிக்கல் இன்ஜினியரிங்கின் கோட்பாடுகளையும் விதிகளையும் பாலிமர் இன்ஜினியர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்காக பிளான்ட் டிசைன், பிராசஸ் டிசைன், தெர்மோடைனமிக்ஸ், போக்குவரத்து அம்சங்கள் ஆகிய தத்துவங்களை பாலிமர் இன்ஜினியர்கள் ஆராய்கிறார்கள். பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் உற்பத்தியை இவர்கள் மேற்பார்வையிடுகின்றனர். மேலும் உற்பத்தித் தளத்தில் பிளாஸ்டிக் மோல்டர்களையும் டெக்னீஷியன்களையும் கண்காணிக்கின்றனர்.
படிப்புகள் மற்றும் தகுதிகள்
இளநிலையில் பி.இ., பி.டெக். மற்றும் முதுநிலையில் எம்.டெக். என்றும் படிப்புகள் உள்ளன. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள் பாலிமர் இன்ஜினியரிங்கில் பி.இ., பி.டெக். படிப்பில் சேரலாம். பாலிமர் இன்ஜினியரிங் மற்றும் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் என இந்தப் படிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன.
எம்.டெக்கில் பாலிமர் இன்ஜினியரிங்/பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்பதற்கு பாலிமர் இன்ஜினியரிங் அல்லது பிளாஸ்டிக் டெக்னாலஜி அல்லது ரப்பர் டெக்னாலஜி அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ., பி.டெக். படித்திருக்க வேண்டும். இயற்பியல் அல்லது வேதியியலில் எம்.எஸ்சி. படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்புகள்
இத்துறையில் படிப்பை முடிப்பவருக்கு பாலிமர் உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் தொழிற்சாலைகளில் புரடக்ஷன் சூப்பர்வைசர், குவாலிடி கன்ட்ரோல் இன்ஸ்பெக்டர், புரடக்ஷன் பிளானர், மோல்ட் டிசைனர் என்னும் பல பணிகள் கிடைக்கின்றன.
பாலிமர் இன்ஜினியர்கள், பாலிமர் டெக்னாலஜிஸ்டுகள், பாலிமர் சயின்டிஸ்டுகளுக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆய்வகம், பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பிளான்டுகள், வெவ்வேறு மாநிலங்களிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம், பாலிமர் கழகங்கள், பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா, கூட்டுறவு லிமிடெட் போன்ற அரசுத் துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.
வெளிநாடுகளிலும் இத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. பி.இ., பி.டெக். முடித்து பணியில் சேரும் பாலிமர் இன்ஜினியர்கள் துவக்கத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்
கல்விநிறுவனங்கள்
அண்ணாபல்கலைக்கழகம், சென்னை ((www.annauniv.edu)
மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே (www.mitpune.com)
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெஸ்ரா (www.bitmesra.ac.in)
கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொச்சி (www.cusat.ac.in)
லங்கோவால் இன்ஸ்டிடியூட் ஆப்இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பஞ்சாப் (www.sliet.ac.in)
