தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முக்கியத்துவம் பெறுகிறது சுற்றுச்சூழல் பொறியியல்

முக்கியத்துவம் பெறுகிறது சுற்றுச்சூழல் பொறியியல்

முக்கியத்துவம் பெறுகிறது சுற்றுச்சூழல் பொறியியல்


UPDATED : மார் 19, 2011 12:00 AM

ADDED : மார் 19, 2011 05:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2011 12:00 AM ADDED : மார் 19, 2011 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏராளமான ஜவுளி தொழிற்சாலைகளைக் கொண்ட திருப்பூரில், தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள், சுற்றுச்சூழலையே நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன.


தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீரால் மாசடைவது நீரும், நிலமும் மட்டுமல்ல நம் சுற்றுச்சூழலும்தான் என்பதை பார்க்கும் எவர்க்கும் இதனை மாற்ற வழி இல்லையா என்ற ஏக்கம் பிறக்கும்.


அந்த ஏக்கத்திற்கு பதில் கிடைத்துவிட்டது என்கிறார் இளம் பொறியாளர் அஜய். பார்க் காலேஜ் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜியில் சுற்றுச்சூழல் பொறியியல் (என்விரான்மென்டல் என்ஜினியரிங்) படித்து வருகிறார் அஜய்.


நான் இந்த தொழிற்சாலைகளை கூர்ந்து கவனித்து வருகிறேன். விரைவில், இதற்கு ஒரு நல்லத் தீர்வினை கண்டுபிடித்து, என் கனவை நனவாக்குவேன் என்கிறார் நம்பிக்கையுடன்.


கோயம்பத்தூரில், சுற்றுச்சூழலைப் பற்றி கவலைப்படுவது அஜய் மட்டுமல்ல. ஏராளமான இளைஞர்களும் இதேக் கனவைத்தான் கண்டு கொண்டிருக்கின்றனர். இதனால்தான், தற்போது கோயம்பத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுற்றுச்சூழல் பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் போட்டி போடுகின்றனர்.


பார்க் காலேஜ் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜியின் நிர்வாகியான அனுஷா ஆர். மகேஷ் கூறுகையில், 2009ஆம் ஆண்டுதான் பி.இ. படிப்பில் சுற்றுச்சூழல் பாடத்தை அறிமுகப்படுத்தினோம். அப்போது வெறும் 20 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். ஆனால் கடந்த ஆண்டு 40 மாணவர்கள் இந்த பாடப்பிரிவில் சேர்ந்தனர். வரும் ஆண்டில் இன்னும் அதிகமான மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


அக்ரிகல்சர் காலேஜ் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் டாக்டர் ராஜ ராஜன் பேசுகையில், ஏராளமான தொழிற்சாலை நிர்வாகங்கள் பசுமையை நோக்கி செல்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பொறியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம், நன்கு திறன் பெற்ற, தகுதியான பொறியாளர்களையே தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற நியமிக்கின்றன என்றார்.


கோயம்பத்தூரில் உள்ள அண்ணா யூனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜியின் கீழ் செயல்படும் அனைத்துக் கல்லூரிகளிலும் சுற்றுச்சூழல் குறித்து இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன என்று துணைவேந்தர் டாக்டர் கே. கருணாகரன் தெரிவித்தார். மேலும், பல கல்லூரிகள் வரும் கல்வி ஆண்டில் சுற்றுச்சூழல் பொறியியல் படிப்பினை சேர்ப்பதற்கான கோரிக்கையை வைத்துள்ளன என்றார்.


இந்த பாடப்பிரிவில் வெறும் புத்தக அறிவும், கற்றுக் கொடுப்பது மட்டும் போதாது. ஒவ்வொரு செமஸ்டருக்கும் 3 தொழிற்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள பணிகளைப்பற்றி தெரிந்து கொள்வது அனுபவ அறிவையும் அளிக்கும்.


பார்க் காலேஜ் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறைத் தலைவர் சங்கீதா ஆனந்த், மக்கள் தொகை, வறுமை, சுற்றுச்சூழல் ஆகியவை அடங்கியதாக பாடப்பிரிவு அமையும். சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் வீணாகும் தண்ணீரை சேமிப்பது, காற்று மாசடைவதைக் கட்டுப்படுத்துதல், மறு சுழற்சி முறை, கழிவுகளை அப்புறப்படுத்துதல், கதிர்வீச்சுக்களில் இருந்து பாதுகாப்பது, தொழிற்சாலையை சுத்தமாக வைத்திருப்பது, சுற்றுச்சூழலை நிலைத்த தன்மையாக வைத்திருப்பது போன்றவை குறித்தும் கற்றுத் தரப்படுகிறது.


முன்பெல்லாம் சிவில் மற்றும கெமிக்கல் என்ஜினியரிங் பிரிவுகளுக்குத்தான் அதிகமான போட்டி இருக்கும். தற்போது சுற்றுச்சூழல் பிரிவிற்கு போட்டி நிலவுகிறது.



கல்வி நிலையங்கள்
தென்னிந்தியாவில் சில கல்வி நிலையங்கள் சுற்றுச்சூழல் பொறியியல் பாடப்பிரிவினை வழங்குகின்றன. அவற்றில் சில,


ஆந்திரா பொறியியல் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்
எஸ்.வி. பொறியியல் பல்கலைக்கழகம், திருப்பதி
பொறியியல் கல்லூரி, திருவனந்தபுரம்
அரசு பொறியியல்  கல்லூரி, திரிசூர்
பி.எம்.எஸ்.பொறியியல் கல்லூரி, பெங்களூரு
எச்.கே.இ. சொசைட்டிஸ் பி.டி.ஏ. பொறியியல் கல்லூரி, குல்பர்கா
கே.எல்.இ. சொசைட்டிஸ் காலேஜ் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, பெல்காம்
எம்.எஸ். ராமைய்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெங்களூரு
யூனிவர்சி பிடிடி காலேஜ் ஆப் என்ஜினியரிங், தேவநகரி
யூனிவர்சிட்டி விஸ்வேஸ்வரய்யா காலேஜ் ஆப் என்ஜினியரிங், பெங்களூரு
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்
அண்ணா பல்கலைக்கழகம் - பொறியியல் கல்லூரி, சென்னை
பாரத் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, சென்னை
அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்பத்தூர்
கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோயில்
வெல்லூர் தொழில்நுட்பக் கல்லூரி, வெல்லூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us