UPDATED : மார் 26, 2011 12:00 AM
ADDED : மார் 26, 2011 02:23 PM
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் விப்ரோ டெக்னாலஜீஸ் நிறுவனம் வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நாளை வளாகத் தேர்வினை நடத்துகிறது.
காலை 8.30 மணிக்கு துவங்கும் இந்த நேர்முகத் தேர்வில், 10 மணிக்குள் பெயரை பதிவு செய்து விட வேண்டும்.
விப்ரோ சாப்ட்வேர் அகாடமிக் எக்சலன்ஸ் தேர்வில், பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்., ஐ.டி., எலேக்ட்ரானிக்ஸ், கணிதம், புள்ளியியல், பி.சி.ஏ., பி.சி.எம். படித்த பட்தாரிகள் கலந்து கொள்ளலாம்.
பட்டப்படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்ணும், பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும்.
விப்ரோ சாப்ட்வேர் டெக்னாலஜி அகாடெமி தேர்வில், பிஎஸ்.சி., வேதியியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், பயோ-டெக்னாலஜி, நியூட்ரிஷன்ஸ், டயட்டிக்ஸ், பயோ-இன்பர்மேடிக்ஸ், விஷ¤வல் கம்யூனிகேஷன், விலங்கியல், தாவரவியல், மரைன் பயாலஜி, மரைன் பயோ-டெக்னாலஜி, மனையியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், புட் டெக்னாலஜி, நர்சிங் பட்டதாரிகள் பங்கேற்கலாம்.
முதலில் எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.
நேர்முகத் தேர்விற்கு வருபவர்கள், 2 ரெஸ்யூம், கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
இதனை சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
