தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கற்பனைக்கு எட்டாத அதிசயங்களுக்கு அனிமேஷன்

கற்பனைக்கு எட்டாத அதிசயங்களுக்கு அனிமேஷன்

கற்பனைக்கு எட்டாத அதிசயங்களுக்கு அனிமேஷன்


UPDATED : மார் 28, 2011 12:00 AM

ADDED : மார் 28, 2011 12:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2011 12:00 AM ADDED : மார் 28, 2011 12:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர், எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்திய மதுரை "வழிகாட்டி" நிகழ்ச்சியில், "அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங்" படிப்புகள் குறித்து அவர் பேசியதாவது: அனிமேஷன், கிராபிக்ஸ் இரண்டுமே கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்கள் தான். இதில் அச்சாக, நகரும் படங்களாக, ஓடும் சித்திரங்களாக, கட்டடங்களாக, நமது கற்பனைக்கு எட்டாத அதிசயங்களை நிகழ்த்த முடியும்.


2டி அனிமேஷன் துறை, மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகிறது. மிகப்பெரிய அறுவை சிகிச்சை முறைகளை நேரடியாக காண்பிப்பதற்கு முன், செயல்விளக்கமாக காட்டுவதற்கு அனிமேஷன் உதவுகிறது. அணியும் ஆடைகளில் கூட நவீன மாற்றத்தை ஏற்படுத்த அனிமேஷன் உதவுகிறது. இன்டிசைன் மூலம் புத்தகங்கள், பத்திரிகைகளை வடிவமைக்கலாம். இதற்கு வீட்டிலிருந்தவாறே பணிசெய்யலாம்.


மொபைல் போன், கம்ப்யூட்டர், இணையதளம், டிவி, பிளே ஸ்டேஷன்களில் காண்பிக்கப்படும் விளையாட்டுக்களை புதிது புதிதாக வடிவமைக்கலாம். இதற்கு 3டி அனிமேஷன் உதவுகிறது. இதில் மனித மாதிரிகளை உருவாக்குவதோடு, மரம், செடி, கொடி, நீருற்றை உருவாக்கி பிரமிக்கச் செய்யலாம். அறையில் உட்கார்ந்து கொண்டு, அழகிய இயற்கை காட்சி பின்னணியை கொண்டு வரலாம்.


மிகப்பெரிய நிறுவனங்களின் பாகங்களை அனிமேஷன் மூலம் இயக்குவதற்கான வேலைவாய்ப்பு உள்ளது. பொழுதுபோக்கு சாதனங்கள், கல்வி, விற்பனை, அச்சுத் துறைகளில் பணிவாய்ப்புகள் உள்ளன. பட்டுச் சேலையில் நவீன யுக்தியைப் பயன்படுத்தி, விரும்பிய டிசைனை கொண்டுவர உதவுகிறது.


2டி அல்லது 3டி பற்றிய அடிப்படையை தெரிந்து கொண்டு, ஏதாவது ஒன்றை மட்டும் படித்தால் குழப்பம் ஏற்படாது. இத்துறையில் அடுத்த சிலஆண்டுகளில் மூன்று லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us