தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு உதவிய வழிகாட்டி நிகழ்ச்சி

மாணவர்களுக்கு உதவிய வழிகாட்டி நிகழ்ச்சி

மாணவர்களுக்கு உதவிய வழிகாட்டி நிகழ்ச்சி


UPDATED : ஏப் 04, 2011 12:00 AM

ADDED : ஏப் 04, 2011 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2011 12:00 AM ADDED : ஏப் 04, 2011 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக வழிகாட்டி எனும் உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக நடத்தியது.


கல்வி ஆலோசகர்களின் வழிகாட்டும் விதமான பேச்சும், பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஒரே குடையின் கீழ் அமைந்த வளாகமும் மாணவர்களுக்கு தங்கள் கல்வி குறித்து எண்ணற்றத் தகவல்களை அளிக்கும் வகையில் அமைந்தது.


தினமும் காலை முதலே மாணவர்கள் ஆர்வத்துடன் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.


இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று ஏராளமான மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கல்வி ஆலோசகர்கள் அளித்த பல்வேறு ஆலோசனைகளையும் கேட்டனர்.


கல்வி நிறுவனங்களின் பாடப்பிரிவுகள், வழிமுறைகள் பலவற்றையும் தெரிந்து கொண்டனர்.


மாணவ, மாணவியருக்காக தினமலர், எஸ்.ஆர்.எம். பல்கலையுடன் இணைந்து நடத்திய இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும், "என்ன படிப்பது என்ற கேள்விக் குறியுடன் உள்ளே வந்தோம். இப்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது" என்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us