தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மறுவாழ்வு பொறியியல் படிப்பில் சேரலாம்

மறுவாழ்வு பொறியியல் படிப்பில் சேரலாம்

மறுவாழ்வு பொறியியல் படிப்பில் சேரலாம்


UPDATED : ஏப் 04, 2011 12:00 AM

ADDED : ஏப் 04, 2011 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2011 12:00 AM ADDED : ஏப் 04, 2011 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவ தொழில்நுட்பத்திலேயே, மறுவாழ்வு தொழில்நுட்பம்தான் மிகவும் முக்கியத்துவம் பெற்ற துறையாக விளங்குகிறது. பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை இன்னும் சிறப்பாக மாற்றவே இந்த மறுவாழ்வு பொறியியல் துறை உதவுகிறது.


மறுவாழ்வு என்பது, மாற்று உறுப்பு தயாரித்தல், முதுகெலும்பு காயமடைந்தவரக்ளுக்கு, ஐம்புலன்களில் ஏற்படும் பாதிப்புகளை களைய அவர்களுக்கு மாற்றுத் திறன்களைக் கண்டறிந்து அவற்றில் பயிற்சி அளிப்பது குறித்த உயிரி மருத்துவ பொறியியலின் ஒரு பிரிவுதான் மறுவாழ்வு பொறியியல்.


இந்தியாவில் வாய்ப்பு
இந்தியாவில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.


மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று உடல் உறுப்பு, மருத்துவக் கருவிகளை கண்டறியும் ஆராய்ச்சியில் போதிய அளவு முன்னேற்றம் இல்லை. ஒரு சிலவற்றைத் தவிர, குறிப்பாக, ஜெய்ப்பூர் செயற்கை கால்கள். செயற்கை மாற்று உறுப்புகளை, பயனாளிகள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில், குறைந்த விலையில் உருவாக்கும் துறை இன்னமும் பாற்றாக்குறையாகவே உள்ளது.


சாதிக்கும் துறை
மாணவர்கள் இந்த துறையில் தங்களது முழுத் திறனையும் காண்பித்தால், மாணவர்கள் மட்டுமல்லாமல், அவர்களால் பல மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறுவார்கள் என்பது உண்மை. இத்துறையில் புதிய பொறியாளர்களின் கண்டுபிடிப்பு, இந்திய மக்களுக்கு மட்டும் அல்லாமல், உலக மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அமைவது, இத்துறை மாணவர்களுக்கு இன்னும் அதிக ஊக்கத்தை அளிக்கும்.


மறுவாழ்வு பொறியியல் துறை என்பது இல்லாமல் இருந்தால், தற்போது மாற்றுத் திறனாளிகள் யாரும் நடமாடவே முடியாது. எனவே இதுபோன்ற முக்கியத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் பயின்று நாட்டிற்கும், படித்த கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்க்கலாம்.


கல்வித் தகுதி


ஆர்.இ. எனப்படும் ரிஹாப்லிடேஷன் என்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர பிளஸ் 2 வகுப்பை முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்திருக்க வேண்டியது அவசியம்.


கல்வி நிலையங்கள்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காஞ்சிபுரம்,
ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி
ஒசமானியா பல்கலைக்கழகம், ஹைதராபாத்
நாராயணா நர்சிங் இன்ஸ்டிடியூஷன்ஸ், நெல்லூர்
ரியல் லைப் க்ரூப் ஆப் எஜுகேஷன், டெல்லி
எக்ஸல் காலேஜ் ஆப் ஹையர் எஜுகேஷன், மும்பை இன்னும் ஏராளமான கல்வி நிலையங்கள் இப்பாடப்பிரிவை வழங்குகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us