தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., ஜே.இ.இ.,தேர்வு முறையில் சீர்திருத்தம்

ஐ.ஐ.டி., ஜே.இ.இ.,தேர்வு முறையில் சீர்திருத்தம்

ஐ.ஐ.டி., ஜே.இ.இ.,தேர்வு முறையில் சீர்திருத்தம்


UPDATED : ஏப் 09, 2011 12:00 AM

ADDED : ஏப் 09, 2011 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2011 12:00 AM ADDED : ஏப் 09, 2011 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் பட்டப்படிப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜே.இ.இ., என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வுகளில் சிறந்த 30 மாணவர்களைப் பயிற்றுவித்து தொடர்ந்து 3 ஆண்டுகளாக முழுமையான வெற்றியை உறுதிப்படுத்துவதில் பீகாரின் "சூப்பர் 30" கல்வி நிலையம் பெயர் பெற்றது.


பீகாரில் பின் தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் இடம் கிடைப்பதனை தாரக மந்திரமாகக் கொண்டு இதன் நிறுவனர் குமார் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இவரை பாரதப் பிரதமரும் மத்திய மனித வள அமைச்சரும் நேரில் சந்தித்து ஐ.ஐ.டி.,க்களின் நுழைவுத் தேர்வு சீர்திருத்தம் குறித்த சில முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்கள்.


தற்போது ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வின் தேர்வு தாள்களை ஸ்கேன் செய்து இணைய தளத்தில் வெளியிடும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தத் தேர்வுகளின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவை சூப்பர் 30ன் குமார் வரவேற்றுள்ளார்.


ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் சரியான பதில்களையும் தேர்வு முடிந்த 48 மணி நேரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வு குறித்த எதிர்மறை விமர்சனங்களுக்கு இடமே இல்லாமல் போகும் வாய்ப்புகள் உள்ளது.


கிராமப்புற பகுதிகளிலிருந்து ஜே.இ.இ., தேர்வு எழுதுபவர்களுக்கான அதிகபட்ச முயற்சிகளை அதிகரித்தல், பிளஸ் 2 அளவிலான பாடப் பகுதிகளிலிருந்து அறிவைச் சோதிக்கும் கேள்விகளை நுழைவுத் தேர்வில் கேட்பது போன்ற சூப்பர் 30ன் பரிந்துரைகள் இன்னமும் அமல்படுத்தப்பட இல்லை.


இந்தியாவின் கல்வி முறையில் உள்ள ஏராளமான ஏற்றத் தாழ்வுகள் காரணமாக கிராமப்புற பகுதிகளில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு அதிக பட்சம் 3 முறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இன்னமும் நிலுவையிலேயே இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us