UPDATED : ஏப் 13, 2011 12:00 AM
ADDED : ஏப் 13, 2011 03:16 PM
அ நிறம் | அளவு
அமெரிக்க தூதரத்தில் இருந்து 1000 புத்தகங்கள், டெல்லியில் உள்ள 10 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகங்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா - இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கெளர் ஆகியோருக்கு இடையே மலர்ர்ந்த நட்புறவின் அடையாளமாகும் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, அமெரிக்க தூதரக அதிகாரியின் மனைவி சல்லி ரோமர் இந்த புத்தகங்களை வழங்கினார்.
இந்த புத்தகம், கதைகள், நகைச்சுவை, பல அரிய தகவல்கள், பள்ளிச் சிறார்களுக்கு அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிய வைக்கும் வகையிலான தகவல்கள் அடங்கியதாக உள்ளது.
