தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆமதாபாத் ஜெர்மன் டூல்டை பயிற்சிகள்

ஆமதாபாத் ஜெர்மன் டூல்டை பயிற்சிகள்

ஆமதாபாத் ஜெர்மன் டூல்டை பயிற்சிகள்


UPDATED : ஏப் 18, 2011 12:00 AM

ADDED : ஏப் 18, 2011 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 18, 2011 12:00 AM ADDED : ஏப் 18, 2011 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் இந்தோ ஜெர்மன் டூல் ரூம் எனப்படும் சிறப்புப் பயிற்சி மையம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ளது. இந்த நிறுவனம் டூல் மற்றும் டை துறைகளில் மிக நவீனமான சிறப்புப் பயிற்சிகளைத் தருகிறது.


வேலை வாய்ப்புக்கு உத்தரவாதமுள்ள இந்தப் பிரிவில் நமது மாநிலத்திலும் சில நிறுவனங்கள் பயிற்சியைத் தந்தாலும் இந்த நிறுவனம் நடத்தும் பயிற்சியானது மேம்பட்ட தரத்தோடும் நவீன தொழில் நுட்பத்தில் முழு பயிற்சியைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.


இதன் டிப்ளமோ இன் டூல் அண்ட் டை மேக்கிங் படிப்பானது 4 ஆண்டு படிப்பாகும். இதில் 60 சீட்கள் உள்ளன. ஆகஸ்ட் 1 அன்று 15 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


சர்டிபிகேட் இன் மெஷினிஸ்ட் டூல் ரூம் படிப்பானது 2 ஆண்டு படிப்பையும் ஒரு ஆண்டு நடை முறை இன்டர்ன்ஷிப்பையும் கொண்டது. 40 சீட்கள். ஆகஸ்ட் 1 அன்று 15 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை தரப்படுகிறது. விடுதி வசதிகள் உள்ளன.


முழு விபரங்கள் பெற முகவரி
Indo German Tool Room,
Plot No. 5003, PhaseIV, GIDC, Vatva,
Ahmedabad  382445 (Gujarat)
Tel No: (079) 25840961, 25841960,
Fax: (079)25841962,
Email:
training@igtrahd.com.
Website:
www.igtrahd.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us