தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.ஆர்.டி.எஸ்., வழங்கும் பணி வாய்ப்புகள்

எம்.ஆர்.டி.எஸ்., வழங்கும் பணி வாய்ப்புகள்

எம்.ஆர்.டி.எஸ்., வழங்கும் பணி வாய்ப்புகள்


UPDATED : ஏப் 20, 2011 12:00 AM

ADDED : ஏப் 20, 2011 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2011 12:00 AM ADDED : ஏப் 20, 2011 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாஸ் ராபிட் டிரான்ஸிட் சிஸ்டம் எனப்படும் எம்.ஆர்.டி.எஸ்., மெட்ரோ நகரங்களில் செயல்படுத்தப்படும் புது வித ரயில் போக்குவரத்தாகும். நகர நெரிசல்களைக் கருத்தில் கொண்டு இந்த ரயில்களுக்கான பாதைகள் உயரத்தில் நிறுவப்படுகின்றன.


தமிழ் நாட்டில் சென்னையில் இருப்பது போன்று கர்நாடகாவின் பெங்களூருவிலும் எம்.ஆர்.டி.எஸ்., நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 202 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


என்னென்ன பிரிவுகள்
பெங்களூரு எம்.ஆர்.டி.எஸ்., அறிவித்துள்ள பதவிகளில் சென் இன்ஜினியர் பிரிவில் சிக்னலிங்/டெலிகம்யூனிகேஷன்/ஆட்டோமேடிக் பேர் கலெக்சன், எலக்ட்ரிக் டிராக்சன்/எலக்ட்ரிகல் மெயிண்டனன்ஸ்/லிப்ட் எஸ்கலேட்டர், சிவில் ஸ்ட்ரக்சர் ஒர்க் ஆகிய இடங்களும் ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் இதே பதவிகளும், ரோலிங் ஸ்டாக் மெயிண் டனன்ஸ், பெர்மனண்ட் வே பதவிகளும், மெயிண்டெய்னர்ஸ் பிரிவில் இதே பதவிகளும், டிராக் மெயிண்டனர்ஸ், கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜர், ஸ்டேஷன் கன்ட்ரோலர், டிரெய்ன் ஆபரேட்டர் இடங்களும் நிரப்பப்பட உள்ளன. முழு விபரங்களை அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.


என்ன தேவை
எம்.ஆர்.டி.எஸ்., அறிவித்துள்ள மேற்கண்ட காலியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ப கல்வித் தகுதி தேவைப்படுகிறது. எனவே முழுமையான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


வயது வரம்பு
எம்.ஆர்.டி.எஸ்.,ஸின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அடிப்படைத் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் சென் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கும், ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கும், கஸ்டமர் ரிலேஷன்ஸ் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர் களாகவும் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை
மாஸ் ரேபிட் டிரான்ஸிட் சிஸ்டம் அறிவித்துள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.200/ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் சலான் மூலமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.100/ மட்டும் செலுத்தினால் போதுமானது. இதன் பின்னர் ஆன்லைனில் 30.04.2011க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.04.2011

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us