UPDATED : ஏப் 21, 2011 12:00 AM
ADDED : ஏப் 21, 2011 10:07 AM
இதனால் பின் தங்கிய மாவட்ட பள்ளிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. கிராம மாணவர்களின் வசதிக்காக, ஆண்டுதோறும் நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டிற்காக, தேசிய இடைநிலை கல்வி திட்டம் மூலம் 344 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
பாரபட்சம்: ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் அதிகம் உள்ள பகுதி பள்ளிக்கு, அதிகபட்சம் 40 மாணவர்கள், கட்டிடங்கள் கட்ட தேவையான காலி இடங்கள் என்ற விதிமுறைகளின்படி தரம் உயர்த்துகின்றனர். இதன்படி, கல்வியில் பின்தங்கிய தர்மபுரி, சேலம், ஊட்டி போன்ற மாவட்ட பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால், கல்வித்துறை பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. உதாரணமாக வரும் கல்வி ஆண்டில், விருதுநகர் மாவட்டத்தில் 36, திருவண்ணாமலையில் 30 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளன.
நோக்கம் வீண்: வரும் 2016 -க்குள் அனைத்து பள்ளிகளையும், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது, தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் நோக்கம். ஆனால், கல்வித்துறை பாரபட்சம் காட்டுவதால், கிராம பள்ளிகளின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விருதுநகர் மாவட்டத்தில் தான் பள்ளி கட்டடம் கட்ட அதிக தேவை மற்றும் இடம் இருக்கிறதா? பிற மாவட்டங்களில் இல்லையா? மற்ற மாவட்டங்களில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் குறைவா? இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கையால் கிராம மாணவர்களின் உயர்பள்ளிப் படிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது&'&' என்றார்.
