தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எல்.ஐ.சி.,யில் மார்க்கெட்டிங் பணி வாய்ப்பு

எல்.ஐ.சி.,யில் மார்க்கெட்டிங் பணி வாய்ப்பு

எல்.ஐ.சி.,யில் மார்க்கெட்டிங் பணி வாய்ப்பு


UPDATED : ஏப் 23, 2011 12:00 AM

ADDED : ஏப் 23, 2011 03:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2011 12:00 AM ADDED : ஏப் 23, 2011 03:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்ஸ்யூரன்ஸ் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது எல்.ஐ.சி.,தான். இந்தியாவில் மட்டுமன்றி சர்வ தேச அளவிலும் எல்.ஐ.சி., என்ற லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் சாதனைகள் பலவற்றைப் புரிந்து வருகிறது. பொதுத் துறை நிறுவனங்கள் என்றாலே முகம் சுளிக்கும் பலரையும் சிறந்த வாடிக்கையாளர் சேவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஊழியர்கள், நவீனமயமாக்கப்பட்ட நாடு தழுவிய கிளைகளின் மூலம் கவர்ந்து இழுக்கிறது.



இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தொடர்புடைய நேரடி வணிகத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் 'டைரக்ட் சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்' பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட சென்னையில் 90 இடங்களும், புதுச்சேரியில் 37 இடங்களும், திருச்சியில் 44 இடங்களும், திரு நெல்வேலியில் 29 இடங்களும், சேலத்தில் 32 இடங்களும், கோவையில் 14 இடங்களும், மதுரையில் 6 இடங்களும், வேலூரில் 63 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.



எல்.ஐ.சி.,யின் டி.எஸ்.இ., பதவிக்கு விண்ணப்பிக்க 01.05.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 



தேவை என்ன
எல்.ஐ.சி.,யின் நேரடி விற்பனை அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு மார்க்கெட்டிங் தொடர்புடைய விற்பனைத் திறன்கள் கட்டாயம் தேவைப்படும். இத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங், நிர்வாகவியல், ஆங்கிலத் திறன், கம்ப்யூட்டர் தொடர்புடைய பவர் பாயின்ட், எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜ்களில் செயலாற்றும் திறன் போன்றவை இருப்பவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.



தேர்ச்சி முறை
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பங்களின் அடிப்படையில் தேவைப்பட்டால் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும், இதன் பின்னர் நேர்காணல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறை
எல்.ஐ.சி.,யின் மார்கெட்டிங் தொடர்புடைய டி.எஸ்.இ., பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/ கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு எல்.ஐ.சி., கிளையின் கேஷ் கவுண்டரில் 114034 என்ற அக்கவுண்ட் எண்ணில் ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டும்.



விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.04.2011
இணைய தள முகவரி: " www.licindia.in"

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us