தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மொழிக் கல்விக்கு இ.எப்.எல். பல்கலை

மொழிக் கல்விக்கு இ.எப்.எல். பல்கலை

மொழிக் கல்விக்கு இ.எப்.எல். பல்கலை


UPDATED : ஏப் 26, 2011 12:00 AM

ADDED : ஏப் 26, 2011 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 26, 2011 12:00 AM ADDED : ஏப் 26, 2011 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுதந்திர நாட்டின் முதன் பிரதமரான ஜவகர்லால் நேருவால் துவக்கப்பட்ட சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இங்கிலீஷ், ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்வி நிலையமாக உருவாகி, பின்னர் வெளிநாட்டு மொழிகளையும் கற்றுத்  தர ஆரம்பித்தது. அதன்பின்னர், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இங்கிலீஷ் மற்றும் வெளிநாட்டு மொழிகள் என்று பெயர் மாற்றம் பெற்றது.


அதைத் தொடர்ந்து 50 ஆண்டுகளாக மொழித் துறையில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை அளிக்கும் கல்வி நிறுவனமாக செயல்பட்டதன் அடிப்படையில், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளின் பல்கலைக்கழகம் என்று அந்தஸ்து உயர்ந்து, பி.ஏ. பட்டப்படிப்பை அளிக்கும் வகையில் மாற்றம் பெற்றது.


பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் பாடப்பிரிவுகளில் பி.ஏ. பட்டப்படிப்பை வழங்குகிறது. ஆங்கிலத்தில் இலக்கணம், உரைநடை, செய்யுள் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது. ஆங்கில மொழியில் பல்வேறு பிரிவுகளும், அதன் கீழ் ஏராளமான பாடங்களும் மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


தற்போது செய்தித் துறை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. அந்தத் துறையில் பணியாற்றும் வகையில், மாணவர்களுக்கு மாஸ் கம்யூனிகேஷன் துறையில் வகுப்புப் பாடங்களும், செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதழியல் பாடப்பிரிவும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.


3 ஆண்டுகள் பயிலும் இந்த படிப்பில், செமஸ்டர் முறையில் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு செமஸ்டருக்கும் 4 பாடப்பிரிவுகள் என 3 ஆண்டுகளில் ஒரு மாணவர் 24 பாடங்களை படிக்கும் வகையில் இந்த பாடப்பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கடைசி 2 செமஸ்டர் தேர்வுகளில், நீங்கள் நிபுணத்துவம் பெற நினைக்கும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து பயிலும் வசதியும் உள்ளது.


மேலும், ஆங்கில இலக்கியம், ஆங்கில மொழி, ஆங்கில மொழியில் கற்பித்தல் போன்ற பாடப்பிரிவுகளும், இதேப் பாடப்பிரிவுகள் வெளிநாட்டு மொழிகளிலும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us