தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எழுத்தறிவில் தமிழகம் எத்தனையாவது இடம்?

எழுத்தறிவில் தமிழகம் எத்தனையாவது இடம்?

எழுத்தறிவில் தமிழகம் எத்தனையாவது இடம்?


UPDATED : ஏப் 29, 2011 12:00 AM

ADDED : ஏப் 29, 2011 12:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2011 12:00 AM ADDED : ஏப் 29, 2011 12:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் (80.33 சதவீதம்) 14வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கேரளா (93.91 சதவீதம்) உள்ளது. கடைசி இடத்தில் பீகார் (63.82 சதவீதம்) உள்ளது.


இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்செஸ் கணக்கெடுக்கப்படுகிறது. இதில் நாட்டின் மக்கள் தொகை, மக்கள் அடர்த்தி, ஆண்கள், பெண்கள் பிறப்பு விகிதம், எழுத்தறிவு ஆகிய தகவல்கள் கணக்கெடுக்கப்படுகிறது. இதன்படி நாட்டின் 15வது சென்செஸ் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.


இதில் நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 19 லட்சத்து 3 ஆயிரத்து 422 பேர். இதில் 7 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 105 கோடியே 14 லட்சத்து 4 ஆயிரத்து 135. இதில் 77 கோடியே 84 லட்சத்து 54 ஆயிரத்து 120 பேர் எழுத்தறிவு பெற்றவர்கள். மீதமுள்ள 27 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரத்து 15 பேர் எழுத்தறிவு பெறாதவர்கள்.


எழுத்தறிவில் பெண்கள் குறைவு
நாட்டின் சராசரி எழுத்தறிவு சதவீதம் 74.04. இதில் ஆண்கள் 82.14 சதவீதமும், பெண்கள் 65.46 சதவீதமும் உள்ளனர். 2001ம் ஆண்டு சென்சசில் நாட்டின் சராசரி எழுத்தறிவு சதவீதம் 64.83 ஆக இருந்தது. தற்போது பத்து ஆண்டுகளில் 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது.


எழுத்தறிவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள இடைவெளி (16.68 சதவீதம்) தொடர்வது பின்னடைவான விஷயம். இதிலிருந்து பெண் கல்விக்கு இன்னும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆண் ஓருவர் எழுத்தறிவு பெற்றால் அது அவருக்கு மட்டுமே பயன்படும், அதே நேரத்தில் ஒரு பெண்ணுக்கு எழுத்தறிவித்தால், அது அந்த சமூகத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்&' என எழுத்தறிவு பற்றி மகாத்மா குறிப்பிட்டுள்ளார்.


கேரளா ஆதிக்கம்
மாநிலங்களின் வரிசையில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையில், வழக்கம் போல கேரளா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் எழுத்தறிவு சதவீதம் 93.91. ஆண்களின் எழுத்தறிவு சதவீதத்தில் லட்சத்தீவு (96.11 சதவீதம்) முதலிடத்திலும், பெண்களின் எழுத்தறிவு சதவீதத்தில் கேரளா (91.98 சதவீதம்) முதலிடத்திலும் உள்ளது. இப்பட்டியலில் தமிழகம் முறையே 16 மற்றும் 15 ஆகிய இடங்களில் உள்ளது.


டாப் 10' மாநிலங்கள் ரேங்க்
மாநிலம்/யூனியன் பிரதேசம்,  சதவீதம்

1 கேரளா  - 93.91
2 லட்சத்தீவு  - 92.28
3 மிசோரம்  - 91.58
4 திரிபுரா  - 87.75
5 கோவா  - 87.40
6 டாமன், டையூ - 87.07
7 புதுச்சேரி  - 86.55
8 சண்டிகார்  - 86.43
9 புதுடில்லி  - 86.34
10 அந்தமான்
நிகோபர் தீவுகள்  - 86.27

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us