தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எச் - 1பி விசா ஊழியர்களுக்கு ஐ.பி.எம்., கொடுத்த அதிர்ச்சி

எச் - 1பி விசா ஊழியர்களுக்கு ஐ.பி.எம்., கொடுத்த அதிர்ச்சி

எச் - 1பி விசா ஊழியர்களுக்கு ஐ.பி.எம்., கொடுத்த அதிர்ச்சி


UPDATED : நவ 28, 2026 02:56 PM

ADDED : நவ 28, 2026 02:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 02:56 PM ADDED : நவ 28, 2026 02:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
சுமார் 1,50,000 பேர் பணிபுரியும் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம்., அமெரிக்கா பணி விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் வழங்குவதை நிறுத்த முடிவெடுத்துள்ளது.

இதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியே பணியை தொடரவும் அல்லது 2026 இறுதிக்குள் பணியில் இருந்து விலக வேண்டும் எனக் கூறியுள்ளது.

இதில் முடிவெடுக்க 3 வார காலம் அவகாசம் அளித்துள்ளது. வெளிநாட்டில் சென்று பணியாற்ற விரும்பாதவர்களுக்கு மூன்று மாதம் விடுப்பு அளிப்பதுடன், டிசம்பர் 31ஐ பணியாற்றுவதற்கான கடைசி நாளாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

வேறு இடங்களில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு 1,278 பணியிடங்கள் உள்ளதாக தெரிகிறது. அதில், 1125 இடங்கள் இந்தியாவிலும், சிங்கப்பூரில் 23, பிரிட்டனில் 18 இடங்கள் உள்ளன.

இந்த முடிவால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது இது வரை வெளியாகவில்லை. மேலும் அவர்களில் எத்தனை பேர் அமெரிக்காவிற்கு வெளியே பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் அந்நிறுவனம் விளக்கவில்லை.

எச் - 1பி விசா வைத்திருப்பவர்களுக்கும், கிரீன் கார்டுக்காக காத்திருப்பவர்களுக்கும் இந்த முடிவு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us