அண்ணா நூலகத்திற்கு விடிவு; ரூ.1 கோடிக்கு புதிய புத்தகங்கள்
அண்ணா நூலகத்திற்கு விடிவு; ரூ.1 கோடிக்கு புதிய புத்தகங்கள்
UPDATED : ஜூன் 08, 2016 12:00 AM
ADDED : ஜூன் 08, 2016 10:32 AM
சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட, அண்ணா நுாற்றாண்டு நினைவு நுாலகத்தை, அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. தவிர, அந்த நுாலகத்தை இடமாற்றம் செய்யவும், முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
எனினும்,
சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு, உயர் நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து, தமிழக அரசு, அந்த நுாலகத்திற்கு தேவையான அம்சங்களை
செய்து தர முன் வந்துள்ளது. நுாலக பராமரிப்பு பணிகள் சூடு பிடித்தன. முதற்கட்டமாக
நுாலகத்தில், இரண்டு ஆண்டுகளாக மாயமான, &'நுா&' என்ற எழுத்து பொருத்தப்பட்டது.
மற்றொரு முன்னேற்றமாக, ஐந்து ஆண்டுகளுக்கு பின், முதல்முறையாக, புதிய புத்தகங்கள் நுாலகத்துக்கு வாங்கப்பட்டுள்ளன. ஒரு கோடி ரூபாய் செலவில், 1,500 தலைப்பிலான புத்தகங்கள், தலா நான்கு பிரதிகள் வீதம் வாங்கப்பட்டுள்ளன. மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல் மற்றும் சட்டம் தொடர்பான புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இனி வரும் காலங்களில், வாசகர்களுக்கு தேவைப் படும் புதிய புத்தகங்களும் வாங்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். புதிய புத்தகங்கள் மாயமாகி விடாமல்
தடுக்க, முறைப்படி பதிவேடு மூலம் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
