தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"உலக தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வருவதே லட்சியம்"

"உலக தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வருவதே லட்சியம்"

"உலக தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வருவதே லட்சியம்"


UPDATED : நவ 23, 2014 12:00 AM

ADDED : நவ 23, 2014 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2014 12:00 AM ADDED : நவ 23, 2014 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேலவன், 17; ஸ்குவாஷ் வீரர். அவர் எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, 20க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.

தனது லட்சியம் குறித்து அவர் கூறியதாவது: எனது அப்பா செந்தில்குமார்; அம்மா பிரியதர்ஷினி. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபட துவங்கினேன். கடந்த 2013ம் ஆண்டு, ம.பி., மாநிலம் இந்தூரில், ஆசிய அளவிலான, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், ஈரான் வீரரை வீழ்த்தி, தங்க பதக்கம் வென்றேன்.

தேசிய பள்ளிகள் ஸ்குவாஷ் போட்டிகளில், மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து, சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். உலக ஜூனியர் இறுதி ஸ்குவாஷ் போட்டியில், நமீபியாவில் பேட்சன் ரூனியிடம் தோல்வி அடைந்தேன். அதில், நான் தொடர்ந்து முன்னிலையில் இருந்தும், தோல்வி அடைந்தது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் ஐந்தாம் இடம் பிடித்தேன்.

ஆசிய ஜூனியர் போட்டிகளில், தொடர்ந்து மூன்று முறை, டைட்டில் வென்றுள்ளேன். அதேபோல், தேசிய ஜூனியரில், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை ஜெயித்துள்ளேன். அடுத்த ஐந்தாண்டுகளில், ஆண்கள் பிரிவில், தொழில்முறை வீரராக உருவாகி, உலக தரவரிசையில், முதல் 10க்குள் இடம் பிடிப்பதை லட்சியமாக வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us