UPDATED : ஏப் 23, 2025 12:00 AM
ADDED : ஏப் 23, 2025 09:36 PM

பெங்களூரு:
பாடப் புத்தகங்களின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக கர்நாடக பாடநுால் கழகம் அறிவித்துள்ளது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடக்கிறது. பல தனியார் பள்ளிகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கர்நாடக பாடநுால் கழகம் 2025 - 26 கல்வியாண்டில், பாடப் புத்தகங்களின் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், பெற்றோர் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த பத்து சதவீதம் விலை உயர்வை பெற்றோரிடமிருந்து கட்டணமாக வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதனால், பெற்றோர் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே, பள்ளி கட்டணத்தைத் தொடர்ந்து சீருடைக்கும், காலணிகளுக்கும் கூடுதலாக செலவழித்துள்ள நிலையில், தற்போது பாடநுால்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இது பெற்றோர் மீதான சுமையை அதிகரித்துள்ளது.

