UPDATED : ஜூன் 15, 2011 12:00 AM
ADDED : ஜூன் 15, 2011 05:36 PM
அ நிறம் | அளவு
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.10,200 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
டெல்லி சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரம் குறித்து அறிக்கையை அளித்தார்.
வரும் கல்வியாண்டில் 9,12,000 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட வேண்டும். இதற்கு சுமார் 10,200 கோடி ரூபாய் தமிழக அரசுக்குத் தேவைப்படுகிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
