தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு ’ரிசல்ட்’; ’104’ல் சிறப்பு ஆலோசனை

பத்தாம் வகுப்பு ’ரிசல்ட்’; ’104’ல் சிறப்பு ஆலோசனை

பத்தாம் வகுப்பு ’ரிசல்ட்’; ’104’ல் சிறப்பு ஆலோசனை


UPDATED : மே 25, 2016 12:00 AM

ADDED : மே 25, 2016 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2016 12:00 AM ADDED : மே 25, 2016 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால்
, 104 சேவை மையத்தில் மாணவர்கள், பெற்றோருக்கு இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:

பொதுவாக, தேர்வில் மதிப்பெண் குறைவு, தோல்வி காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பர். இந்த நேரத்தில் பெற்றோர் திட்டுவது, மாணவர்களிடம் விபரீத எண்ணங்களை ஏற்படுத்தி விடும். பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும். ஆறுதல் படுத்துங்கள்; முடியாவிட்டால், ஒரு முறை, 104ஐ அழையுங்கள்; உளவியல் ரீதியாக, இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனைகளை தருகிறோம்.

இது, நல்ல பலன் தரும். இதற்காக, கூடுதலாக உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us